கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரஜினி ; வைரலாகும் ”வாக்கிங்” வீடியோ

தன்னுடைய இளைய மகள் சௌந்தர்யா, மருமகன், மற்றும் பேரனுடன் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கியுள்ளார் ரஜினி

தன்னுடைய இளைய மகள் சௌந்தர்யா, மருமகன், மற்றும் பேரனுடன் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கியுள்ளார் ரஜினி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Viral trending video of Rajinikanth walking at his Kelambakkam farm house

கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடிங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. வெளி வேலைகள் ஏதும் இல்லாத காரணத்தால் மக்கள் தங்களின் உடல்நிலை குறித்து கொஞ்சம் அக்கறை கொள்வதும் நல்லது. ஊரடங்கு முதன்முறையாக அறிவிக்கப்பட்ட நிலையில் 21 நாட்களுக்கு மக்கள் போட்டி போட்டுக்கொண்டு உடற்பயிற்சி வீடியோக்கள் எல்லாம் வெளியிட்டு அசத்தினார்கள். ஆனால் நாளாக நாளாக அது காணாமல் போனது.

Advertisment

மேலும் படிக்க : மீண்டெழும் சென்னை… கொரோனாவை விரட்டி முன்னேறுவது எப்படி?

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய கேளம்பாக்கம் பண்ணைவீட்டில் நடைபயிற்சி மேற்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment
Advertisements

இரண்டு நாட்களுக்கு முன்பு எளிமையான வெள்ளை உடையில், மாஸ்க் அணிந்து கொண்டு மாஸாக லாம்போகினி காரை ஓட்டிச் சென்றார் ரஜினி. ட்விட்டரில் மாஸ் கிளப்பியது அந்த புகைப்படம். தற்போது இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.

வழக்கமாக அதிகாலை 05 மணிக்கு போயஸ் கார்டன் இல்லத்தில் உடற்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். ஊரடங்கு காலம் என்பதால் நேற்று முன்தினம் (20/07/2020) தன்னுடைய பண்ணை வீட்டிற்கு தன்னுடைய இளைய மகள் சௌந்தர்யா மற்றும் மருமகன், பேரனுடன் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு அவர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : மாஸான தருணம்: ’லம்போகினி’ காரை ஹாயாக ஓட்டிச் சென்ற ரஜினி!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Rajinikanth

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: