விவசாயி ராகேஷ் உன்னி பாடலுக்கு ரசிகர் ஆகிய கமல் ஹாசன்: வைரல் வீடியோ

கடந்த சில நாட்களாகச் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பார்க்கப்பட்டு வந்த கேரள விவசாயி மற்றும் பாடகரை நேற்று கமல் ஹாசன் நேரில் சந்தித்தார்.

kerala singer rakesh unni : கேரளா பாடகர் ராகேஷ் உன்னி

கேரளா விவசாயி மற்றும் பாடகர் ராகேஷ் உன்னியை நேரில் சந்தித்து பாராட்டினார் கமல் ஹாசன்

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரப்பர் விவசாயி மற்றும் பாடகர் ராகேஷ் உன்னி கிருஷ்ணன் பாடிய விஸ்வரூபம் பாடல் வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரல் ஆனது. இந்த வீடியோவை பாடகர் ஷங்கர் மகாதேவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ராகேஷ் உன்னியைப் பாராட்டி அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

பாடகர் ஷங்கர் மகாதேவன் அவர்களை வியப்பில் ஆழ்த்திய விவசாயி ராகேஷ் பாடல் வீடியோவை பார்க்க இந்த லிங்க் கிளிக் செய்யவும்

ராகேஷ் உன்னி பாடல் வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் இணைந்து அவரை அடையாளம் காண ஷங்கர் மகாதேவனுக்கு உதவினார்கள். இதற்குப் பிறகு ஷங்கர் மகாதேவனும் கேரள பாடகரை தொடர்பு கொண்டு தொலைப்பேசியில் பேசினார். அப்போது இருவரும் இணைந்து பாடுவதற்கு தகுந்து முயற்சிகளை விரைவில் எடுப்பதாகவும் ஷங்கர் மகாதேவன் தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியானது. இதனைத் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார் ஷங்கர்.

கேரள பாடகர் ராகேஷ் உன்னியை பாடகர் ஷங்கர் மகாதேவன் தொடர்பு கொண்டு என்ன பேசினார் என்பதை அறிய இந்த லிங்க் கிளிக் செய்யவும்

ஷங்கர் மகாதேவனை தொடர்ந்து, ராகேஷ் உன்னிக்கு ரசிகராக மாறியிருக்கிறார் நடிகர் கமல் ஹாசன். விஸ்வரூபம் 1 படத்தில் இடம்பெற்றுள்ள “உன்னை காணாத” பாடலைப் பாடிய ராகேஷ் உன்னியைத் தனது அலுவலகத்திற்கு அழைத்து நேரில் சந்தித்து பாராட்டினார் கமல் ஹாசன். அப்போது அந்தப் பாடலை கமல் ஹாசனுக்கு நேரில் பாடிக் காட்டினார் ராகேஷ் உன்னி. இந்த வீடியோ இணையத்தளம் முழுவதும் வைரல் ஆனது.

ஒரு வாரத்திற்குள் இந்தியா முழுவதும் வைரல் ஆன ராகேஷ் உன்னியின் பாடல் திறமையைப் பார்த்த பல இசை கலைஞர்கள் அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் ராகேஷ் உன்னிக்கு படங்கள் பாடும் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close