கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸ் தாக்கம் தலை விரித்தாடுகிறது. இதில் பல பிரபலங்களும் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில், நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை, அவரின் மேலாளர் ஆகியோருக்கு கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டார். தற்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்த அவர், கொரோனா அனுபவம் குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வாட்ஸ் ஆப் புது அப்டேட்: இதற்குத்தானே ஆசைப்பட்டீங்க..?
அந்த பதிவில், ‘எனது அப்பா ஜி.கே.ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. அவரை வீட்டில் வைத்து சிகிச்சை அளித்தோம். அவருக்கு உதவி செய்ததால், எனக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து என்னுடைய மேலாளர் ஹரிக்கும் கொரோனா பாதித்தது. நாங்கள், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவம் எடுத்து ஒரு வாரத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
வனிதாவுக்கு எதிராக லட்சுமி- கஸ்தூரி கூட்டணி
பின்னர் வீடியோ ஒன்றையும் வெளியிட்ட அவர், “நான் ஆயுர்வேதிக் மருத்துவத்துக்கு விளம்பரம் செய்வதற்காக இதனை சொல்லவில்லை. இது மனித நேயத்தோட இன்னொரு மனுஷனுக்கு உதவுறதுக்காக சொல்றது. இப்போ கூட சொல்லலன்னா, உண்மையிலேயே தூக்கம் வராது. கொரோனா வந்தாலும் பயப்படக் கூடாது. எங்க அப்பாவுக்கு 82 வயது. அவர் பயப்படாமல் இருந்தார். அந்த மாத்திரைதான் என்னையும் அவரையும் கொரோனாவிலிருந்து மீட்டது’ என்று தனது கொரோனா அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”