இந்தியாவில் விமான சேவை நிறுத்தம் - ஏற்படப் போகும் தாக்கம் என்ன?
இன்று நள்ளிரவு முதல், ரயில்வே மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சாலைப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்துவதோடு கூடுதலாக விமானப் பயணமும் ரத்து செய்யப்படுகிறது
இன்று நள்ளிரவு முதல், ரயில்வே மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சாலைப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்துவதோடு கூடுதலாக விமானப் பயணமும் ரத்து செய்யப்படுகிறது
Air travel suspended in India: impact will Covid-19 on travellers, airlines
இரவு 11.59 க்குப் பிறகு, கோவிட் -19 நோய்த்தொற்றுகள் விரைவாகப் பரவுவதைத் தடுப்பதற்காக விமானப் பயணத்தை தடை செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளதால், ஒரு வாரத்திற்கு எந்த பயணிகள் விமானமும் இந்தியாவில் இயங்காது.
Advertisment
இதன் விளைவாக உள்நாட்டில் தினமும் இயங்கும் 3,300 விமானங்களும் ரத்து செய்யப்படும்.
முந்தைய நாளோடு ஒப்பிடும்போது செவ்வாய்க்கிழமை விமான நிறுவனங்கள் அதிக விமானங்களை இயக்குகின்றன. எவ்வாறாயினும், இன்று நள்ளிரவு முதல், ரயில்வே மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான சாலைப் போக்குவரத்தை முற்றிலுமாக நிறுத்துவதோடு கூடுதலாக விமானப் பயணமும் ரத்து செய்யப்படுகிறது.
விமானப் பயணத்தைப் பொறுத்தவரை, இந்த கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும், அனைத்து சரக்கு விமானங்கள், ஆஃப்-ஷோர் ஹெலிகாப்டர் செயல்பாடுகள், மருத்துவம் தொடர்பான விமானங்கள் மற்றும் விமான ஒழுங்குமுறை இயக்குநரகம் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் (டிஜிசிஏ) ஒப்புதல் பெற்ற சிறப்பு விமானங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது.
செவ்வாய்க்கிழமைக்கு பிறகு பயணத்திற்காக முன்பதிவு செய்த பயணிகள் நிலை என்ன?
விமான நிறுவனங்கள் இது குறித்து இதுவரை எதுவும் சொல்லவில்லை. எவ்வாறாயினும், எல்லா சந்தர்ப்பங்களிலும், அவர்கள் பிற்காலத்தில் இலவசமாக வேறு விமானங்களில் பயணம் செய்யலாம், அல்லது சில சந்தர்ப்பங்களில் பணத்தைத் திரும்பப் பெறுவார்கள்.
திங்களன்று உள்நாட்டு விமான அட்டவணையில் 50 சதவீதத்திற்கும் குறைவாக விமானங்கள் இயங்கியதால் செயல்பாடுகள் குறைந்தன.
அனைத்து விமானங்களையும் ஒரு வாரத்திற்கு தரையிறக்கும் அரசாங்கத்தின் அறிவிப்பின் மூலம், காலியான விமானங்கள் பறக்காது என்பதால், அது நிறுவனங்களின் இழப்பைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil