கொரோனா வைரஸ் - ஏன் தடுப்பூசி இன்னும் கைக்கு எட்டா தூரத்தில் உள்ளது?

கோவிட் -19 க்கு எதிரான புதிய தடுப்பூசி பற்றி ஒவ்வொரு முறையும் செய்திகள் வரும் பொழுதும், உலகம் முழுவதும் நம்பிக்கைகள் அதிகரிக்கின்றது. ஆனால் சிலர் யதார்த்தமான அணுகுமுறையையும் எடுத்துள்ளனர். கோவிட் -19ல் இருந்து தப்பிப்பிழைத்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் போன்றவர்கள் தி மெயிலில் எழுதியுள்ளனர்: “இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது, ஒரு தடுப்பூசி பலனளிக்காது என்பதில் நான் வெளிப்படையாக இருக்க வேண்டும்… நாம் வைரஸை கட்டுப்படுத்த புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஒரு தடுப்பூசியின் உருவாக்கம் என்பது ஒரு நீண்ட செயல்முறையாகும், இது ஆய்வு எந்த கட்டத்திலும் தடுமாறக்கூடும். செயல்திறன் பற்றிய சிக்கலும் உள்ளது – செயல்திறனுக்கு எதிராக நிஜ வாழ்க்கை நிலைகளில் தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து, சோதனை அடங்கும்.

கொரோனா பாதிப்பு – முதன்முறையாக ஒரேநாளில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட சோதனைகள்

ஒரு நபருக்கு வைரஸ் தொற்று காணப்பட்டவுடன், நெறிமுறைகளின்படி, அதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மூன்று கட்டங்களாக சோதிக்க வேண்டும்.

கோவிட் -19 ஐ பொறுத்தவரை, இப்போது உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன, சில புதிதாகவும், சில பிற நோய்களுக்காக உருவாக்கப்பட்ட மூலக்கூறுகளிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 

கடந்த மாதம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அதன் தடுப்பூசி ChAdOx1 nCoV-19 ஐ சோதனை செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்தது, இது பொதுவான குளிர் வைரஸிலிருந்து உருவாக்கப்பட்டது, அதன் பாதுகாப்பு ஏற்கனவே மனிதர்களில் நிறுவப்பட்டுள்ளது. “ChAdOx1 nCoV-19 ஒரு வைரஸிலிருந்து (ChAdOx1) தயாரிக்கப்படுகிறது, இது சிம்பன்ஸிகளில் தொற்றுநோய்களை ஏற்படுத்தும் பொதுவான குளிர் வைரஸின் (அடினோவைரஸ்) பலவீனமான பதிப்பாகும், இது மரபணு மாற்றம் என்பதால், மனிதர்களில் வளர இயலாது. ஸ்பைக் கிளைகோபுரோட்டீன் (எஸ்) எனப்படும் COVID-19 வைரஸிலிருந்து (SARS-CoV-2) புரதங்களை உருவாக்க பயன்படும் ChAdOx1 கட்டமைப்பில் மரபணு பொருள் சேர்க்கப்பட்டுள்ளது” என்று பல்கலைக்கழகம் கடந்த மாதம் அறிவித்தது. இந்த புரதம் SARS-CoV-2 இன் மேற்பரப்பில் காணப்படுகிறது.

கடந்த வாரம், மக்காக்களில் ( குரங்கு வகை) நடத்தப்பட்ட தடுப்பூசி பரிசோதனையின் முடிவுகளை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், தடுப்பூசி தொற்றுநோயைத் தடுக்கவில்லை, ஆனால் அது நிமோனியாவைத் தடுத்தது என்று தெரிவிக்கப்பட்டது.

கன்சினோ உயிரியல்

ஹாங்காங்கில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான கன்சினோ பயோலாஜிக்ஸ் ஒரு தடுப்பூசியை பரிசோதித்து வருகிறது. கடந்த வாரம் முதல் கட்ட சோதனைகள் முடிந்து, “கட்டம் 1 மருத்துவ பரிசோதனையின் ஆரம்ப பாதுகாப்பு தரவுகளின் அடிப்படையில்” 2 ஆம் கட்டத்திற்கு தடுப்பூசி ஆய்வு நகர்கிறது என்று அறிவித்தது . அந்த விசாரணையின் முடிவுகள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இதுவும் ஒரு அடினோவைரஸ் சார்ந்த தடுப்பூசி. இந்த ஆய்வு ஆரோக்கியமான 500 நோயாளிகளில், அகாடமி ஆஃப் மிலிட்டரி மெடிக்கல் சயின்சஸ் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து சோதனை செய்யப்படும்.

கனடாவின் தேசிய ஆராய்ச்சி கவுன்சில், கனடாவில் அதன் தடுப்பூசியான Ad5-nCoV ஐ உருவாக்க நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதாகக் கூறியுள்ளது.


சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் சினோவாக் என்ற மற்றொரு நிறுவனம் ஒரு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, மேலும் ஆண்டுக்கு 100 மில்லியன் ஷாட்ஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ளது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Explained: அலுவலகங்கள் மீண்டும் திறப்பதற்கு அரசின் வழிகாட்டுதல்கள் என்ன?

இம்பீரியல் கல்லூரி லண்டன்

லண்டன் இம்பீரியல் கல்லூரியில் தடுப்பூசி முயற்சிக்கு இங்கிலாந்து அரசு நிதியுதவி செய்கிறது. இங்கிலாந்தின் மருத்துவத் துறையின் மியூகோசல் தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியின் தலைவரான பேராசிரியர் ராபின் ஷாடோக் மற்றும் அவரது குழுவினர் சீனாவிலிருந்து வைரஸின் மரபணு வரிசையைப் பெற்ற 14 நாட்களுக்குள் தடுப்பூசியை உருவாக்கினர். இது விலங்குகளில் சோதிக்கப்படவில்லை. ஆராய்ச்சியாளர்கள் விரைவில் மனித சோதனைகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர், மேலும் பேராசிரியர் ஷாடோக் அடுத்த ஆண்டு இந்த தடுப்பூசி கிடைக்கக்கூடும் என்று மேற்கோளிட்டுள்ளார்.

இன்னோவியோ மருந்துகள்

அமெரிக்காவைச் சேர்ந்த இன்னோவியா மருந்து நிறுவனம், டிஎன்ஏ மருந்தான INO-4800 சோதனை செய்து அதற்கான அனுமதியும் பெற்றுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இது முதல் கட்டம் மருத்துவ பரிசோதனைகளைத் தொடங்கியது. இது விலங்கு ஆய்வில் நேர்மறையான பதிலைக் காட்டியது என்று நிறுவனம் கூறியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close