ஊழல் குறியீடு பட்டியலில் (CPI) இந்தியா இரண்டு இடங்கள் சறுக்கி 80 வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. அதன் மதிப்பெண் 41 ஆக உள்ளது.
இந்த குறியீட்டை ஆண்டுதோறும் ஜெர்மனியை தளமாகக் கொண்ட டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அரசு அலுவலகங்கள், பொது வணிக நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாகக் கொண்டு இந்த லிஸ்ட் தயாராகிறது.
உலகளாவிய தொற்று நோய்கள் ஏன் சீனாவில் இருந்து உருவாகின்றன?
இது ஒவ்வொரு நாட்டிற்கும் பூஜ்ஜியத்திலிருந்து (மிகவும் ஊழல் நிறைந்த) 100 வரை (மிகவும் சுத்தமாக) மதிப்பெண் அளிக்கிறது.
கடந்த ஆண்டு உலகெங்கிலும் நடந்த பெரும் ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மை குறைவதைக் குறிக்கின்றன. மேலும் அரசியல் தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஜனநாயகம் மீதான நம்பிக்கையை மக்கள் இழப்பதை அந்த அறிக்கை கூறுகிறது.
2019ம் ஆண்டுக்கான சிபிஐ பட்டியல் ஜனவரி 23 அன்று வெளியிடப்பட்டது. 180 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பொதுத்துறை ஊழலை அளவிட 13 ஆய்வுகள் மற்றும் நிபுணர்கள் மதிப்பீடுகள் கொண்டு வெளியிடப்பட்டது.
2019ல் பெற்ற சராசரி மதிப்பெண் 43 ஆகும். மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் 50க்கு கீழே மதிப்பெண் பெற்றன.
"ஊழல் மிகுந்த நாடுகளில் தேர்தல் பிரச்சாரங்களில் போது பெரியளவில் பணம் சுதந்திரமாக புழங்குகிறது" என்று டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
நரைமுடியை சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்கும் மன அழுத்தம் - ஆய்வு