scorecardresearch

Explained: முதல் முப்படை தளபதியை நியமித்த இந்தியா, மற்ற நாடுகளில் நிலவரம் என்ன?

ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு படைத் தலைவர்(சி.டி.எஃப்) மற்றும் பாதுகாப்புத் துறையின் செயலாளர் ( பாதுகாப்பு அமைச்சகத்தின்  மூத்த பொது ஊழியர்) கூட்டாக பாதுகாப்பு அமைப்பை நிர்வகிக்கிறார்கள்.

Explained: முதல் முப்படை தளபதியை நியமித்த இந்தியா, மற்ற நாடுகளில் நிலவரம் என்ன?

ஜெனரல் பிபின் ராவத் திங்களன்று இந்தியாவின் ​​முதல் முப்படை தளபதியாக (சி.டி.எஸ்) நியமிக்கப்பட்டார். முப்படை சேவைகளின் ஒருங்கிணைப்பதன் மூலம் அரசியல் தலைமைக்கு வழங்கப்படும் இராணுவ ஆலோசனையின் தரத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய பதவியாகும்.

மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?

ஆங்கிலத்தில் இந்த கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

முப்படை தளபதி என்பது இராணுவத்தின் ஒரு உயர் அலுவலகம். இது மூன்று சேவைகளின் பணிகளை மேற்பார்வையிடுகிறது, ஒருங்கிணைக்கிறது. மேலும், நீண்டகால பாதுகாப்பு திட்டமிடல் (உதாரணமாக ராணுவத்திற்கு தேவைப்படும் மனிதவளங்கள் , உபகரணங்கள், கூட்டுப் போர் யுக்திகள்) குறித்து இந்திய பிரதமருக்கு  தடையற்ற  ஆலோசனைகளை வழங்கும்.

உலகெங்கிலும் பல நாடுகளில் இதுபோன்ற பதவி உள்ளது.

அமெரிக்கா: அமெரிக்க பாதுகாப்புத்துறை வலைத்தளத்தின்படி, chairman of the Joint Chiefs of Staff  (சிஜேசிஎஸ்)நாட்டின் மிக உயர்ந்த இராணுவ அதிகாரி. அமெரிக்கா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் (இந்தியாவில் பாதுகாப்பு அமைச்சருக்கு சமமானவர்), தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவைகளுக்கு முதன்மை இராணுவ ஆலோசகராக விளங்குகிறார்.

அமெரிக்காவில் முப்படைக் கூட்டுப்படைத் தலைவர்கள் (Joint Chiefs of Staff ; ஜேசிஎஸ்) என்று அழைக்கப்படும் ஒரு உயர்மட்ட அமைப்பை  தலைமை தாங்குபவராக சிஜேசிஎஸ் இருக்கிறார். இந்த உயர்மட்ட அமைப்பில், சிஜேசிஎஸ் தவிர, கூட்டுப் படைத் தலைவர்களின் துணைத் தலைவர் (விசிஜேசிஎஸ்), ராணுவம்/மரைன் கார்ப்ஸ்/கடற்படை/விமானப்படை, விண்வெளிப்படை போன்ற படைத் தலைவர்களும் இந்த  முப்படைக் கூட்டுத் தலைவர்கள்(ஜேசிஎஸ்) அமைப்பில் உள்ளனர்.

பெல்காம் எல்லை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் : மகாராஷ்டிரா – கர்நாடகா இடையே பதட்டம்

ஜேசிஎஸ் வலைத்தளத்தில், கூட்டுப்படைத் தலைவர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற பொறுப்பு ஒரு குறிப்பிட்ட இராணுவ சேவைகளின் தலைவர்களின்  கடமைககளை விட முன்னுரிமையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Explained: நிலையான அபிவிருத்தி இலக்கு அட்டவணை (SDG Index) என்றால் என்ன?

முதலில் இரண்டாம் உலகப் போரின்போது உருவாக்கப்பட்டது இந்த ஜேசிஎஸ் அமைப்பு. 1986ன் கோல்ட்வாட்டர்-நிக்கோல்ஸ் டிஓடி மறுசீரமைப்புச் சட்டம் ஜேசிஎஸ் அமைப்புக்கு தற்போது அதிகாரமளிக்கிறது.


பிரிட்டிஷ் அரசு : முப்படை தளபதி

பிரிட்டிஷின் முப்படை தளபதி  (சிடிஎஸ்) ஆயுதப் படைகளின் முதன்மைத்  தலைவராவார்.  பாதுகாப்பு துறை செயலாளருக்கும் (இந்தியாவில் பாதுகாப்பு அமைச்சருக்கு சமமானவர்) மற்றும் அரசாங்கத்திற்கும்  முதன்மை இராணுவ ஆலோசகராவும் இருக்கிறார் .

பிரிட்டிஷின் முப்படை தளபதி பாதுகாப்பு செயலாளருக்கும், பிரதமருக்கும் அறிக்கை அளிப்பதாக இங்கிலாந்து அரசின் வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதவி பாதுகாப்பு அமைச்சகத்தின் மூலம் செயல்படுகிறது. மேலும், பாதுகாப்பு அமைச்சகத்தின்  மூத்த அரசு ஊழியரான நிரந்தர பாதுகாப்பு செயலாளரின்  கீழ் முப்படை தளபதி பணியாற்றுகிறார்.

முப்படை தளபதி தலைமைத் தளபதிகள் குழு (சி.எஸ்.சி) தலைவராகவும் இருக்கிறார். பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளார்.

முப்படை தளபதி  முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக நாட்டின் பாதுகாப்பு (நிரந்தர செயலாளருடன் இணைந்து), ராணுவப் படைகளின் எதிர்கால வளர்ச்சி (அமைச்சர்களின் வழிநடத்துதலுக்கு உட்பட்டு, மற்றும் நிரந்தர செயலாளருடன் சேர்ந்து), பாதுகாப்புக்கான மூலோபாயத்தை அமைத்தல், ராணுவ செயல்முறைகளை தொடருதல், பிற நாட்டு  ஆயுதப்படைகளுடன் உறவை மேம்படுத்துதல் (தளபதியாக).

ஆஸ்திரேலியா: பாதுகாப்பு படைத் தலைவர்(சி.டி.எஃப்) மற்றும் பாதுகாப்புத் துறையின் செயலாளர் ( பாதுகாப்பு அமைச்சகத்தின்  மூத்த பொது ஊழியர்) கூட்டாக பாதுகாப்பு அமைப்பை நிர்வகிக்கிறார்கள் என்று பாதுகாப்புத் துறை வலைத்தளம் தெரிவித்துள்ளது.

அவர்கள் பாதுகாப்புக் குழுவின் இணைத் தலைவர்களாக உள்ளனர்.  இந்த குழுவில் பாதுகாப்புப் படையின் துணைத் தலைவர் (வி.சி.டி.எஃப்), கடற்படை/ராணுவம்/விமானப்படைத் தலைவர்களும்  அடங்குவர்.

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை (ஏ.டி.எஃப்) இயக்குவது  பாதுகாப்பு படைத் தலைவரின் முதன்மையான வேலை .  பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் பாதுகாப்பு படைத் தலைவர் செயல்படுகிறார் .

பாதுகாப்பு படைத் தலைவர்  அமைச்சரின் முதன்மை இராணுவ ஆலோசகராக உள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: India gets first chief of defence staff what is the equivalent post in the us and uk