ISIS chapter in Afghanistan : கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான அல் நபா வார இதழின் தலையங்கத்தில், தாலிபானின் வெற்றி குறித்து இஸ்லாமிக் ஸ்டேட் தன்னுடைய கருத்தை ”முல்லா ப்ராட்லே” என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளது. வேறொரு வார்த்தைகளில் கூறுவது என்றால், அமெரிக்காவின் பிரதிநிதி. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் பகுதியில் உள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை சிறுமைப்படுத்தும் நோக்கில் இஸ்லாமிய போர்வையை புதிய தாலிபான்கள் அணிந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த தலையங்கத்தில் ஆப்கானிஸ்தான் முழுவதும் ஷரியாவை நடைமுறைப்படுத்துமா என்ற கேள்வியையும் கேட்டுள்ளது. மேலும் ஜிஹாத்தின் புதிய கட்டத்திற்கு தயாராகி வருவதையும் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.
மோசமான போர்
60க்கும் மேற்பட்ட நபர்களை பலிவாங்கிய வியாழக்கிழமை அன்று காபூல் விமான நிலையத்தில் நடைபெற்ற இரட்டை வெடிகுண்டு தாக்குதல்கள் மூலம், இந்த தாக்குதலுக்கு காரணம் என்று அமெரிக்கா மற்றும் இதர உளவுத்துறையால் குற்றம் சாட்டப்பட்ட , IS- கோரசன் மாகாணம் (ISKP), குழுவின் ஆப்கான் பிரிவு புதிய ஆப்கானிஸ்தானில் தங்களின் இருப்பை ஆப்கானிஸ்தானிற்கு குறிப்பாக அறிவித்துள்ளது. மேலும் தாலிபான்களுடனான போரை தீவிரப்படுத்தும் எண்ணத்திலும் இது உள்ளது.
கடந்த சில வாரங்களில், ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றுவதற்காக தலிபான்கள் தங்கள் இராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதும், அமெரிக்க துருப்புக்கள் வெளியேறியதும், ISKP அமைதியாக இருந்தது. ஜூன் 8 அன்று இக்குழுவால் கடைசியாக தாக்குதல் நடத்தப்பட்டது. சுரங்கத்தை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஹாலோ என்ற பிரிட்டிஷ் தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய 10 பேரை துப்பாக்கியால் சுட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். முன்னதாக, ஹசாரா சமூகத்தை குறிவைத்து காபூல் பள்ளி மீது குண்டு வீசியதாக ஐ.எஸ்.கே.பி. கூறியது. கொல்லப்பட்ட 100 பேரில் பெரும்பாலானோர் குழந்தைகள்.
மேலும் படிக்க : தாலிபான்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் இன சிறுபான்மையினர்; யார் இந்த ஹசாராக்கள்?
வெளிப்படையான போக்குகளுடன் இந்த தாக்குதல்கள் இருந்ததால், ஆப்கான் படையினரிடம் தங்களின் நிலப்பரப்பை இழந்து, தாலிபான்களால் பலவீனப்படுத்தப்பட்டனர். 2018 மற்றும் 2019 ஆண்டுகளில், ISKP தனது கோட்டைகளை தக்கவைத்துக் கொள்ள கடுமையான போர்களில் ஈடுபட்டது, குறிப்பாக குனார் மற்றும் நாகன்ஹார் பகுதிகளில். 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் ஐ.எஸ். பொறுப்பு கூறிய மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான் நகரை உலுக்கியது. ஏப்ரல் 2020 ஆண்டில், காபூலில் உள்ள குருத்வாரா மீது கொடிய தாக்குதல் நடத்தப்பட்டது, அதைத் தொடர்ந்து காபூல் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. பல்கலைக்கழகம், மெடிசின்ஸ் சான்ஸ் ஃப்ராண்டியர்ஸ் மருத்துவமனை, ஜலலாபாத் சிறை, நங்கர்ஹாரில் ஒரு காவல்துறை அதிகாரியின் இறுதி ஊர்வலத்திலும் தாக்குதல்களை நடத்தியது.
ஆரம்ப காலங்கள்
2020ம் ஆண்டு ஐ.எஸ்.கே.பி. அமைப்பு நகர்புறங்களில் தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டனர். வாஷிங்டன் சிந்தனை மையமான (think tank) ஸ்டிம்சன் மையத்தின் சௌரவ் சர்காரின் ஆய்வின்படி 2020ம் ஆண்டு நடைபெற்ற 11 தாக்குதல்கள், 2019ம் ஆண்டு நடைபெற்ற 343 தாக்குதல்கள் எண்ணிக்கையில் இருந்து ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சியாகும். அந்த அமைப்பின் மனிதவளம், வளங்கள் மற்றும் ஒழுங்கமைக்கும் திறன்களில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியை இது பிரதிபலிக்கிறது.
2016ஆம் ஆண்டில் அதன் வலிமையான நிலையில், ISKP தீவிரவாத அமைப்பில் 2,500- 8500 போராளிகள் இருந்ததாக ஸ்டிம்சன் சென்டர் ஆய்வு மதிப்பிட்டுள்ளது, ஆனால் 2019 ஆண்டில் இது சுமார் 2,000-4,000 போராளிகளாகக் குறைந்தது.
2014ம் ஆண்டில், ஜெனரல் ரஹீல் ஷெரீப்பின் கீழ் பாகிஸ்தான் இராணுவம் தெஹ்ரீக் இ தலேபானுக்கு எதிராக வசிரிஸ்தான் பகுதியில் நடவடிக்கைகளை மேற்கொண்ட காலகட்டத்தில் பாகிஸ்தானில் ஐ.எஸ்.கே.பி. அமைப்பு செயல்பாட்டுக்கு வந்தது. தெஹ்ரீக் இ தலேபான் குழுவில் ஏற்பட்ட அதிருப்தி காரணாமாக அதில் இருந்து பிரிந்து வந்த தாலிபான்களால் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. முல்லா ஃபஸ்லுல்லா அல்லது முல்லா ரேடியோவுக்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்தனர்.
ஒமர் காலித் கொராசனி தலைமையிலான கிளர்ச்சியாளர்கள், பாகிஸ்தானுடன் நடத்திய பேச்சுவார்த்தை காரணமாக டி.பி.பி. முஜாஹிதீன் கொலையாளிகளுக்கு விற்றதாக குற்றம் சாட்டினார்கள். அவர்கள் ஐஎஸ் அமைப்புக்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறினார்கள். தன்னை ஜமாத் உல் அஹ்ரார் என்று அழைத்த இந்த குழு பாகிஸ்தானில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது. பிறகு அவர்கள் லஷ்கர் - இ - ஜாங்க்வி அல்-அலமி, லஷ்கர் - இ - இஸ்லாம் மற்றும் இஸ்லாமிக் மூமெண்ட் ஆஃப் உஸ்பெகிஸ்தான், உய்குர்ஸ் மற்றும் ஆப்கான் தாலிபான் கிளர்ச்சியாளர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.
பாகிஸ்தான் கோணம்
2018ம் ஆண்டின் போது, லஷ்கர்-இ-தொய்பாவுடன் இருந்து பிறகு சிரியாவில் பாக்தாதி வீரர்களுடன் இணைந்து சண்டை போட்ட ஷேக் அஸ்லாம் ஃபரூக்கி என்ற பாகிஸ்தானி பஷ்தூன் இனத்தை சேர்ந்தவர் அதன் தலைவராக வந்த போது ஐ.எஸ்.கே.பி. பிளவுட்டது. பாகிஸ்தான் மற்றும் தாலிபான்களுக்கு எதிராக போர் புரியும் இந்த குழு அதன் தலைவரின் விசுவாசத்தை சந்தேக கண்ணோட்டத்தோடு பார்த்தது. வெளிநாட்டில் இருந்து இந்த குழுவுக்கு ஆதரவு அளித்தவர்கள், இவர் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் வழிநடத்தப்படுகிறார் என்று நம்பினார்கள். பிறகு பாகிஸ்தான் மண்ணில் ஐ.எஸ்.கே.பி. தாக்குதல் நடத்தவில்லை. ஆப்கானிஸ்தானில் பணியாற்றிய முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி ஆனந்த் அர்னியின் குயின்ட்டில் சமீபத்தில் வந்த கட்டுரையின் படி, மத்திய ஆசிய போராளிகள் அதன் பின் பிரிந்து சென்று தங்களின் தலைவர்களை தாங்களே நியமித்ததாக தெரியவந்துள்ளது. இந்த ஐ.எஸ்.கே.பி. படையில் லஷ்கர்-இ-தொய்பா வீரர்களும் இருக்கின்றார்கள் என்று இந்திய உளவுத்துறை நம்புகிறது.
காபூல் குண்டு வெடிப்பு: தாக்குதலுக்கு காரணமானவர்களை வேட்டையாடுவோம் – பைடன் உறுதி
காபூல் குருத்வாரா குண்டுவெடிப்புக்குப் பிறகு தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் ஃபாருக்கி மற்றும் காஷ்மீரி தீவிரவாதி அய்ஜாஸ் அஹாங்கரை கைது செய்தது. பாகிஸ்தான் தான் ஐ.எஸ்.கே.பியை உருவாக்கியது என்று இந்திய உளவுத்துறை மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஆப்கானிஸ்டான் அரசும் குற்றம் சுமத்தியது. இல்லையெனில் தலிபான் அல்லது ஹக்கானி நெட்வொர்க்கிற்கு காரணமாக இருக்கும் தாக்குதல்களுக்கு மறுப்பு தெரிவிக்கும். நகர்ப்புற தாக்குதல்களின் நுட்பம் ISKP யின் திறன்களை மறுத்தது என்று ஆர்னி எழுதியுள்ளார், ஏனெனில் அவை காபூலை நன்கு அறிந்த குழு அல்ல. ISKP ஒரு ஆப்கானிஸ்தான்-இந்திய உருவாக்கம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
செய்திகளின் படி, ஐ.எஸ்.கே.பி. உச்சத்தில் இருந்த போது இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து 100க்கும் மேற்பட்டோரை குழுவில் சேர்க்க முடிந்திருக்கிறது. 25 பேரை கொன்ற காபூல் குருத்வாரா தாக்குதலை நடத்தியவர் கேரளத்தவர் என்று இந்திய உளவுத்துறை கூறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.