Advertisment

ரஷ்யா - உக்ரைன் போர்: இந்திய விவசாயிகளுக்கு லாபம் தரும் யுத்தம்

போர் காரணமாக கருங்கடலில் உள்ள துறைமுகங்கள் மூடப்பட்டுவிட்டன. அதே சமயத்தில் காஸ்பியன் கடல் வழியாக ரஷ்ய சரக்கு கப்பல்கள் இயங்கவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் இந்த இரண்டு நாடுகள் தற்போது எந்த விதமான தானிய ஏற்றுமதியையும் மேற்கொள்ள முடியாது. இந்த வெற்றிடத்தில் பாதியை இந்திய விவசாயிகள் நிரப்ப முடியும்.

author-image
WebDesk
New Update
Ukraine Russia Crisis, Export avenue for farmers

Harish Damodaran 

Advertisment

Export avenue for farmers : வரலாற்றில் நடைபெற்ற யுத்தங்கள் அனைத்திலும் வெற்றியாளர்களும், தோல்வி அடைந்தவர்களும் உண்டு. அதே போன்று யுத்தங்கள் வாயிலாக அதிக அளவில் பயன் அடைந்தவர்களும் உண்டு. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, இந்திய விவசாயிகள் தங்களின் ராபிப் பயிர்களை அறுவடை செய்யும் காலத்தில், தீவிரமாக நடைபெற்று வருகிறது. குளிர் - வசந்தகால விவசாயமான ராபிப் பயிர்களில் கோதுமை மட்டுமின்றி, கடுகு, மக்காச்சோளம் மற்றும் பார்லி போன்ற பயிர்களும் அறுவடை செய்யப்படுகிறது. தற்போது இந்த பயிர்களின் விலை அனைத்தும் உயர்ந்துவிட்டது. காரணம், தற்போது போர் நடைபெற்று வருவதால் கருங்கடல் வழியாக நடைபெற்று வந்த வர்த்தகம் தடை பட்டுவிட்டது. அதே போன்று ரஷ்ய வங்கிகள் அனைத்தும் சர்வதேச பணப்பரிமாற்ற அமைப்புகளில் இருந்து முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது.

இந்தியா ஏற்கனவே 2021-22ல் ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி வரையில் 6 மில்லியன் டன் கோதுமையை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த நிதி ஆண்டில் மொத்தமாக, முன்பு எப்போதும் இல்லாத வகையில் 7.5 மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படலாம் என்றும் கூர்கானை தளமாக கொண்டு செயல்படும் கோனிஃபெர் கமாடிட்டிஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற விவசாய வர்த்தக ஆலோசனை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமித் தக்கர் கூறியுள்ளார்.

அதே போன்று அரிசியின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையில் 14 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத இதர அரிசி ரகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 2020-21 நிதி ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட 13.1 மில்லியன் டன் அரிசியைக் காட்டிலும் இது கூடுதலானது. இந்த நிதி ஆண்டின் இறுதியில் 17 மில்லியன் டன் பாஸ்மதி அல்லாத அரிசி மற்றும் 4 மில்லியன் டன் பாஸ்மதி அரிசி ஆகியவற்றை ஏற்றுமதி செய்திருப்போம் என்று தானிய ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் ஓலம் அக்ரோ இந்தியா பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் துணைத் தலைவர் நிதின் குப்தா கூறியுள்ளார். 2013-14 காலகட்டத்திற்கு பிறகு தற்போது 3.5 முதல் 4 டன் வரை மக்காச்சோளம் ஏற்றுமதியும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டு வரும் இந்தியப் பொருளாதாரம்: அச்சுறுத்தும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

Ukraine Russia Crisis Export avenue for farmers

உக்ரைன் என்னும் புறக்காரணி

உக்ரைன் போர்: போலந்தில் 2 விமான எதிர்ப்பு ஏவுகணையை நிறுத்திய அமெரிக்கா… என்ன காரணம்?

வாய்ப்புகள் என்ன?

ராஜஸ்தானில் உள்ள மொத்தவிற்பனை சந்தையில் ஒரு குவிண்டால் கடகு ரூ. 6500 முதல் 6700 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இது ரூ. 5000 முதல் ரூ. 5200 வரை இருந்தது. தற்போது கடுகுக்கு அரசு வழங்கும் குறைந்த பட்ச ஆதரவு விலையே ரூ. 5050 ஆக உள்ளது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் கடுகு விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு இது நன்மை அளிக்கும்.

ஒரு குவிண்டால் பார்லி தற்போது ரூ. 2100 முதல் 2200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இது ரூ. 1300 முதல் ரூ. 1400 வரை விற்பனை செய்யப்பட்டது. மேலும் இதன் குறைந்த பட்ச ஆதரவு விலையானது ரூ. 1653 ஆகும். இந்த தானியம் அதிக அளவில் மதுபான உற்பத்தி நிலையங்களில் மால்ட் உற்பத்திகாக பயன்படுத்தப்படுகிறது. ராஜஸ்தான், உ.பி., மத்தியப் பிரதேசம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் இவை உற்பத்தி செய்யப்படுகிறது.

மக்காச்சோளம் அனைத்து மண்டிகளிலும் குவிண்டாலுக்கு ரூ. 1900 முதல் ரூ. 2000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதன் விலை ரூ. 1200 முதல் ரூ. 1300 ஆக இருந்தது. அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலை ரூ. 1870.

மக்காச்சோளத்திற்கு அதிக விலை கிடைக்கும் பட்சத்தில் பீகார் அதிக அளவில் பயன்பெறும் மாநிலமாக இருக்கும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மக்காச் சோளத்தில் 25% இம்மாநிலத்தில் உற்பத்தி ஆகின்றது. அதிலும் நான்கில் மூன்று பங்கு ராபி காலத்தில் சந்தைக்கு வருபவை. வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மக்காச் சோளத்தின் அளவு அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் வங்கதேசம், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் மக்காசோளம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பீகாரின் மக்காச்சோளத்திற்கு மேலும் நல்ல விலை கிடைக்கும். ப்ரேசில் மற்றும் அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் அதிக அளவில் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டாலும் கூட ஜூன்/ஜூலை காலங்களில் தான் ஏற்றுமதிக்கு தயாராகும். ஆனாலும் கூட தென் அமெரிக்காவில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளின் துறைமுகங்களுக்கு வருவதைக் காட்டிலும், விசாகப்பட்டினம் அல்லது காக்கிநாடா மூலம் விரைவில் இதர நாடுகளுக்கு இந்தியா எளிதில் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்துவிட இயலும்.

கோதுமைக்கான வாய்ப்பு இன்னும் அதிகமாக உள்ளது. குஜராத்தின் காந்தலா மற்றும் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ஒரு டன் 340 டாலர் முதல் 350 டாலருக்கு விற்பனை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஒரு டன் கோதுமையின் விலை ரூ. 26000 முதல் ரூ. 26775 வரை இருக்கும். இதற்கான அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ. 20,150 ஆக உள்ளது. துறைமுக கட்டணம், சேமிப்பு கட்டணம், லோடிங்க் கட்டணம் என்று ரூ. 1400-மும், போக்குவரத்துக்கு ரூ. 1500 முதல் 3000 வரையும், பேக்கிங், லோடிங் மற்றும் மண்டியில் இதர பணிகளுக்காக ரூ. 1600 முதல் ரூ. 2000 வரையிலும் கொடுக்கப்பட்ட பின்பும் கூட இந்த விலை ஒரு விவசாயிக்கு கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.

உயர்ந்து வரும் சர்வதேச விலைகள் இந்திய கோதுமைக்கான ஏற்றுமதி வாய்ப்புகளைத் திறந்துவிட்டன, அதனால் அரசாங்கம் இந்த முறை குறைந்த பட்ச ஆதரவு விலையில் கோதுமையை கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகா அல்லது ம.பி., குஜராத் மாநிலங்களில் ஏற்றுமதி தேவை அதிகரித்து வருவதால் MSP- பிளஸ் விலையை உணர வாய்ப்புள்ளது. இது பொது கோதுமை இருப்புகளை குறைக்க உதவும், இது மார்ச் 1 அன்று 23.4 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடாந்த இரண்டு நிதி ஆண்டுகளிலும் முறையே 29.5 மெட்ரிக் டன் மற்றும் 27.5 மெட்ரிக் டன் இருப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது. குறைந்த கொள்முதல் மற்றும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (இலவச தானியத் திட்டம்) இம்மாதத்துடன் முடிவடைவதால், மத்திய அரசின் உணவு மானியத்தில் அதற்கேற்ப குறைப்பு ஏற்படலாம்.

ஒட்டுமொத்த மேம்பட்ட விலை உணர்வு, மேலும், வரவிருக்கும் காரிஃப் பயிர் பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி, சோயாபீன், எள் மற்றும் சூரியகாந்தி ஆகியவற்றை அதிக பரப்பளவில் பயிரிட விவசாயிகளைத் தூண்டலாம். பயிர் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதில் இது சில வழிகளில் செல்ல வேண்டும். குறிப்பாக விவசாயிகளை நெல் மற்றும் கரும்புகளிலிருந்து விலக்குவது முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.

ரஷ்யா மீதான தடைக்கு பிறகு, கச்சா எண்ணெய்க்கு ஈரான் & வெனிசுலாவை நாடும் அமெரிக்கா

அச்சுறுத்தல்கள் என்ன?

இதுவரை இந்த போர் சூழலால் ஏற்படும் நன்மைகளையே நாம் பட்டியலிட்டோம். தற்போது இத்தகைய சூழலால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் என்ன என்றால், அதிகபட்ச அளவு தானியங்களை அனுப்புவதற்கு ஏற்றுமதியாளர்கள் தங்களுக்குள் போட்டியிடும் வாய்ப்பும் உள்ளது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியனில் இருந்து தானியங்களுக்கு $400-450 என ஒப்பிடும்போது, ​​இந்திய கோதுமை அதிக அளவில் தள்ளுபடி செய்யப்பட்டு டன்னுக்கு $340-350 என வழங்கப்படுவதில் இது தெளிவாகிறது.

சரக்கு கப்பல்களின் அவசரத்தால் துறைமுகங்களில் நெரிசல் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும் கப்பல்களின் காத்திருப்பு காலம் 5 முதல் 7 நாட்களாக அதிகரிக்கும். "வரவிருக்கும் வாரங்களில் தளவாட இடையூறுகள் ஒரு உண்மையான பிரச்சனையாக இருக்கும்" என்று தாக்கர் கூறுகிறார்.

இரண்டாவது, ஒருவேளை பெரிய, ஆபத்து உரங்கள் கிடைப்பது தொடர்பானது. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் உலகளாவிய உணவு விலைக் குறியீடு பிப்ரவரியில் எப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியிருந்தாலும், உரங்கள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்கள் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. யூரியா, டி-அம்மோனியம் பாஸ்பேட் (டிஏபி), மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (எம்ஓபி) மற்றும் இதர உரங்கள் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்து, ஜூன் முதல் காரீஃப் நடவு தொடங்குவதற்கு முன்பே, உரங்களை பெற முயற்சிக்க வேண்டும்.

ரஷ்யா மற்றும் பெலாரஸில் இருந்து எம்ஓபி வழங்குவது குறித்த கேள்விக்குறியுடன், கனடா, இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் போன்ற பிற நாடுகளுடன் அரசாங்கம் பேச வேண்டும். சவூதி அரேபியா, மொராக்கோ, ஜோர்டான், செனகல், துனிசியா மற்றும் டோகோ ஆகிய நாடுகளில் இருந்து டிஏபி, பாஸ்போரிக் அமிலம் மற்றும் ராக் பாஸ்பேட் ஆகியவற்றின் விநியோகத்தைப் பாதுகாக்க இதேபோன்ற விரைவான முயற்சி தேவைப்படுகிறது என்று உரத்துறை வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

(The writer is National Rural Affairs & Agriculture Editor of The Indian Express and Senior Fellow at the Centre for Policy Research, New Delhi)

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment