மே மாதம் 2ம் தேதி பாஜக மேற்கு வங்கத்தில் வெற்றி வாகை சூடும் நாளாக இருந்திருக்க வேண்டும். ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற பிரச்சாரத்தில் பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். இருப்பினும் அன்று மாலை, வெகுநாட்களுக்கு பிறகு சக்கர நாற்காலி இல்லாமல் நடந்து வந்து, முதன்முறையாக மக்கள் மத்தியில் வெற்றி உரையாற்றியது மமதா பானர்ஜி தான். இந்த வெற்றியை எப்படி சாத்தியப்படுத்தினார் மமதா. விளக்குகிறது இந்த சிறப்பு தொகுப்பு
நலத்திட்டங்கள்
2016ம் ஆண்டு தேர்தல் வெற்றிக்கு பிறகு 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் திரிணாமுல் கட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருந்தது. பாஜக 40 தொகுதியில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வாக்கு வங்கியும் 40% ஆக அதிகரித்தது. அதன் பின்னர் முன் எப்போதும் இல்லாத வகையில் மக்களுக்கான மேம்பாட்டு திட்டங்களான தௌரே சர்க்கார் (Duare Sarkaar) மற்றும் திதி கே போலோ போன்றவற்றை இரண்டு மடங்கு வேகம் கூட்டி மக்கள் மத்தியில் சென்றடைய வைத்தது. திதி கே போலோ நேரடியாக மக்கள் தங்கள் குறைகளை அரசாங்கத்திற்கு தெரிவிப்பதற்காக வைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் ருபஸ்ரீ, கன்யாஸ்ரீ, மற்றும் சபூஜ் சாதி போன்ற நிதி திட்டங்களை கீழ்தட்டு மக்களுக்காக செய்து வருகிறது. களத்தில் காணப்பட்ட இரண்டு ஆதாரங்களில் ஒன்று, திட்டங்கள் மத்தியில் முழுமையாக் போய் சேர அக்கட்சி எடுத்துக் கொண்ட முனைப்பு. தௌரே சர்க்கார் மற்றும் திதி கே போலோ போன்ற திட்டங்கள், எங்கே கட்சியின் திட்டங்கள் சறுக்குகிறது என்பதையும் அடையாளம் காண உதவியது. சில இடங்களில் திரிணாமுல் கட்சி தலைவர்கள் பட்டியல் இனத்தோருக்கு சாதி சான்றிதழ்கள் கிடைப்பதில் பிரச்சனை உள்ளது என்று புகார் வைத்தார்கள். உடனே அங்கே இலவசமாக சான்றுகள் வழங்கப்பட்டன. மற்றொன்று பெண்கள் நலனில் அதிக அக்கறை செலுத்தியது. அனைத்து மாநிலங்களிலும் ஆண்கள் பாஜகவிற்கு வாக்களித்திருந்தாலும், அந்த வீட்டின் பெண்கள் நிச்சயமாக மமதாவிற்கு ஆதரவு அளித்தனர்.
ஆளுமைகளின் போர்
பிரச்சாரம் ஆரம்பிக்கும் போது அதே ஆளுமைகளுக்கு இடையேயான போராக ஆரம்பித்தது. இது முதல்வர் மமதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையேயான போராக மாறியது. ஓரளவிற்கு அமித் ஷாவும் இதில் களம் ஆட இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பொருத்தமாக அமைந்தது. உள்ளூர் வன்முறை மற்றும் ஊழல் தொடர்பாக மக்கள் மத்தியில் கோபம் இருந்தது. ஆனால் அது திரிணாமுல் கட்சிக்கு எதிராக இருந்ததே தவிர மமதாவிற்கு எதிராக இல்லை. எனவே அவர் மேற்கு வங்கத்தின் பெண் தலைவராக தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொண்டார். பிறகு மமதாவின் ஆளுமையை ஒட்டியே பிரச்சார வியூகம் வகுக்கப்பட்டது. வீதியில் இறங்கி நிற்கும் தலைவர், சக்கரநாற்காலியில் அமர்ந்து இடைவிடாமல் போராடும் தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்ஆர். பாஜகவும் மமதாவை தொடர் தாக்குதலுக்கு ஆளாக்க மோடி திதி ஓ திதி என்று பேசினார். ஆனால் இது 2019 தேர்தல் கிடையாது. மோடி மேற்கு வங்கத்தின் முதல்வர் பதவிக்காக போட்டியிடவில்லை என்பதை நன்றாக மக்கள் அறிந்திருந்தனர். அவர் உரையாடல்களில் முன்னணியில் இல்லை, அவரைப் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது மட்டுமே பேசப்படுவார். மேலும் மமதா குறித்த அவருடைய தாக்குதல் சரியாக மக்கள் மத்தியில் சேரவில்லை.
துருவமுனை அரசியல்
தேர்தல் பிரச்சாரம் முழுவதும் மத துருவமுனை அரசியல் காணப்பட்டது. இஸ்லாமியர்களுக்கு திருப்தி அளிக்கும் திரிணாமுல் என்று பாஜக குற்றம் சாட்டியது மேலும் செல்லும் வழியெங்கும் ஜெய் ஸ்ரீராம் என்று கோசம் எழுப்பியது. மமதாவும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சந்திபாத் கூறினாலும் மிகவும் எச்சரிக்கையாக இதை கையாண்டது. இறுதியில் துருவமுனைப்பு அரசியல் வேறு விதமாக செயல்பட்டது. பாஜக ஆட்சி வந்தால் என்ன செய்வது என்ற கேள்வி எழவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு ஆதரவாக இருந்த இஸ்லாமியர்கள் திரிணாமுல் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். மற்றொரு பக்கம் மக்கள் தொகையில் 30% இருக்கும் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறாமலே வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது பாஜக. இதற்கு இந்துக்களிடையே மிக உயர்ந்த துருவமுனைப்பு தேவைப்பட்டது, அது நடக்கவில்லை. மமதாவின் எல்லை, மற்றும் மத பைனரிக்குள் வெளிப்படையாக வரக்கூடாது என்ற அவரது முடிவு, அவருக்கு வெற்றியை திருப்பி தந்தது. திரிணாமுல் தனது வாக்குப் வங்கியை 2019 பிறகு அதிகரித்து. பாஜகவுடன் அதன் பங்கைக் குறைத்ததன் மூலம் இடைவெளியை விரிவுபடுத்தியது.
மேலும் படிக்க : அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவிய பாஜக; பிரார்த்தனைக்கு செவி சாய்க்காத கோவில்
நிறுவன வேறுபாடுகள்
பிரச்சாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தாவிய உயர்மட்ட அமைச்சர்களான சுவேந்து அதிகாரி, ராஜீப் பானர்ஜி முதல் உள்ளூர் தலைவரான ஜிதேந்திர திவாரி வரை பேசுபொருளானார்கள். இது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றுவதாக பார்த்தாலும், மமதா தன்னை மற்றும் அவரது கட்சியைச் சுற்றி முற்றுகை மனநிலையை உருவாக்க அனுமதித்தது. அதனால் மமதா ஒருவர் தனி ஆளாக நின்று பாஜகவிற்கு எதிராக போராடும் பிம்பம் உருவானது. மேலும் அது உள்ளூர்க்காரர் வெளியாட்கள் என்ற நிலையையும் உருவாக்க பாஜகவை பர்கிஸ் என்று அழைத்தார் மமதா. கட்சியில் இருந்து வெளியேறியவர்களுக்கு வெற்றியை காட்ட வேண்டும் என்று கடுமையாக திரிணாமுல் கட்சியினர் போட்டியிட்டனர். மற்றொரு பகுதியில் புதிதாக வந்தவர்கள் மத்தியில் கருத்தியலில் வெற்றிடமாக இருந்தது. இடதுசாரியில் இருந்து பாஜகவில் இணைந்தவர்கள் திரிணாமுலை தோற்கடிக்க விரும்பினார்கள். அவர்களுக்கான தொகுதி ஒதுக்கீட்டிலும் வேறுபாடுகள் இருந்தது. உண்மையில், தூண்டுதல்கள் செய்யப்படாவிட்டால், திரிணாமுலை வெற்றி பெறுவதற்கான நிறுவன வலிமை இருந்திருக்காது என்று பாஜக வாதிடும் அதே வேளையில், அது தரையில் ஒரு முரண்பாட்டை ஏற்படுத்தியது. திரிணாமுலுக்கு எதிராக வன்முறையற்ற மற்றும் ஊழல் அல்லாதவர்களாக தன்னைத் தானே முன்வைத்துக் கொண்ட ஒரு கட்சிக்கு, திரிணாமுலில் இருந்து சேர்க்கப்பட்ட அதன் வேட்பாளர்கள் பலரும் ஊழல் மற்றும் வன்முறை தொடர்பான உள்ளூர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர்.
மேலும் படிக்க : 4 ஆண்டுகள் போராட்டம்; ஒரு இடத்திலும் வெற்றி பெறாத டிடிவி… 4 இடங்களை கைப்பற்றிய பாஜக
மக்களுக்கு வழங்க பாஜகவில் ஒன்றும் இல்லை
இரண்டு அடிப்படைகளில் பாஜக இம்முறை போட்டியை சந்தித்தது. ஒன்று ஆளும் கட்சி மீதான அதிருப்தி மற்றொன்று மததுருவமயமாக்கல். தொகுதிகளில் உரையாடல் எங்கிருந்தாலும், எம்.எல்.ஏ.க்கள், அமைப்பு, முதலமைச்சரை அடையாளம் காணுதல், அல்லது பாஜக அளிக்கும் மாற்று வழிகள் என்ன என்று கேள்வி எழுப்பினாலும் பாஜக வாதத்தை இழந்தது. பாஜக ஒரு அறிக்கையை வைத்திருந்தாலும், திரிணாமுலின் நலத்திட்டங்களுக்கு மாற்றாக, அறிக்கையின் ஒரு வாக்குறுதியும் ஒரு நிலையான பிரச்சார ஆடுகளத்தின் ஒரு பகுதியாக முதலீடு செய்யப்படவில்லை. பிரச்சாரத்தின் உரிமையை மத்திய தலைமை எடுத்துக் கொண்டதோடு, லெப்டினன்ட்கள், சுவெந்து ஆதிகாரி, அல்லது முகுல் ராய் அல்லது திலீப் கோஷ் அல்லது வேறு யாராவது முதலமைச்சர் வேட்பாளராக இருப்பார்கள் என்பதில் எந்த தெளிவும் இல்லை, மமதாவைத் தவிர வேறு யார் என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை. பிரச்சாரம் பிரம்மாண்டமாக இருந்தாலும் வாக்காளர்களை வென்று வெற்றியை பெற பாஜகவால் இயலவில்லை. எனவே, திரிணாமுல் வேட்பாளர் அல்லது கட்சியே பிரபலமடையாத இடங்களில் கூட, உள்ளூர் அடியாட்களால் அச்சுறுத்தல் நிலை ஏற்பட்ட போதும் கூட, திரிணாமுலுடன் தங்குவதே பாதுகாப்பான தேர்வாக இருந்தது. கட்சியின் அமைப்பு அப்படியே இருந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.