Advertisment

யுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா?

சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோரை ஒரே ஆட்டத்தில் லெவன் அணியில் சேர்ப்பது கடினம்

author-image
WebDesk
New Update
யுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் - மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா?

இந்த காயம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான அடியாகும்

Tushar Bhaduri

Advertisment

அண்மையில், முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் சரியாக நடத்தப்படாதது போல் உணர்ந்ததாக தெரிவித்தார்.

"என் வாழ்க்கையின் முடிவில் அவர்கள் என்னை நடத்திய விதம் மிகவும் தொழில் சார்ந்ததல்ல என்று நான் உணர்ந்தேன். ஆனால் ஹர்பஜன், சேவாக், ஜாகீர் கான் போன்ற சிறந்த வீரர்கள் மிக மோசமாக நடத்தப்பட்டனர். இது இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகும், இதை நான் கடந்த காலத்தில் பார்த்தேன், உண்மையில் எனக்கு ஆச்சரியமில்லை" என்று 2019ல் ஓய்வு பெற்ற யுவராஜ் சிங் ஒரு விளையாட்டுச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

விளையாட்டு வாழ்க்கை முடிந்ததும் தேர்வாளர்களை விமர்சிப்பது எளிது. ஆனால் இதுபோன்ற கருத்துக்கள் யுவராஜ் சிங் போன்ற அந்தஸ்துள்ள ஒருவரிடமிருந்து வெளிவந்தால், அவற்றை வெளிப்படையாக நிராகரிக்க முடியாது. அதேசமயம், வீரர்களின் செயல்பாடும் எப்படி இருந்தது என்பதை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

யுவராஜ் சிங்

ஐ.சி.சி டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில், தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் அடித்ததும், 2011 உலகக் கோப்பையை இந்தியஅணி வெல்ல முக்கிய காரணமாக இருந்ததற்காக யுவராஜை ரசிகர்கள் நினைவில் கொள்ள விரும்புவார்கள்.

இந்திய ஹாக்கி வீரர் மன்தீப் சிங்கிற்கு கொரோனா – குறைந்த ஆக்சிஜன் அளவு

யுவராஜ் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவர் கடுமையாக போராடினார். குறிப்பாக துணைக் கண்டத்திற்கு வெளியே. அவரது வலிமை அவரது ஸ்டைலான மற்றும் சிரமமில்லாத ஸ்ட்ரோக் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பெரியதாக இருந்தது. ஆனால் அவரது சர்வதேச வாழ்க்கையின் இறுதி நான்கரை ஆண்டுகளில் அந்த திறனும் குறைந்து கொண்டிருந்தது.

புள்ளிவிவரப்படி, 30 போட்டிகளுக்கு மேல் 27.08 என்ற பேட்டிங் சராசரி ஏமாற்றமளிப்பதாக மட்டுமே கூற முடியும். கட்டாக்கில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு த்ரோபேக் 150 ரன்கள் தவிர, யுவராஜ் இந்தியாவில் கூட பந்துவீச்சு தாக்குதல்களை ஆதிக்கம் செலுத்த போராடினார். ஸ்பின் மற்றும் வேகப்பந்து வீச்சில், கோட்டுக்கு வெளியே செல்லும் பந்துகளை அடிப்பதில் அவரது பலவீனம் தெரிந்தது. இது, எதிரணி கேப்டன்கள் அவரைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்கியது.

ஒருமுறை இந்தியா 2017 ஆம் ஆண்டில் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை பெறத் தவறியது - இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றது. அதேசமயம், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே போன்றவர்கள் வெளியே காத்திருந்தனர்.

அவரது டி20 சர்வதேச வாழ்க்கையைப் பொருத்தவரை, 2014 ஐசிசி உலக டி20 இறுதிப் போட்டியில் அவர் அடித்த 21 பந்துகளில் 11 ரன்களோடு முடிவடைந்திருக்கலாம். இறுதியில், இலங்கையிடம் இந்தியா தோற்றதால், யுவராஜ் ரசிகர்களின் கோபத்தை எதிர்கொண்டார். ஆனால் அவர் டி20 கிரிக்கெட்டில் அணிக்கு மீண்டும் வந்தது மட்டுமல்லாமல், உலக டி20 இன் அடுத்த பதிப்பிலும் விளையாடினார் என்பது அவரது அந்தஸ்துக்கு சான்றாகும்.

யுவராஜின் எஞ்சிய டி20 கிரிக்கெட் வாழ்க்கையில், 18 போட்டிகளில் அவர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 35 ஆகும். சராசரி 19. இளைய வீரர்கள் வெளியே காத்துக் கொண்டிருக்கும் சூழலில், யுவராஜ் அணியில் தொடர்ந்து நீடிப்பதற்கு தேர்வாளர்களுக்கு போதுமான காரணங்களை வழங்கவில்லை என்பது தெளிவாகிறது.

வீரேந்தர் சேவாக்

சிறந்த பேட்டிங் நடை மற்றும் மனோபாவம் இருந்தபோதிலும், டெஸ்ட் கிரிக்கெட் வீரேந்தர் சேவாக்கிற்கு மிகவும் வெற்றிகரமான வடிவமாக இருந்தது.

அவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதி பயங்கரமான தொடக்க டெஸ்ட் வீரராக விளங்கினார்.

ஆனால் சில நேரங்களில், தேர்வாளர்கள் தான் இறுதி முடிவுகளை எடுக்க வேண்டும். சேவாக் தனது கடைசி டெஸ்டை மார்ச் 2013 இல் ஹைதராபாத்தில் விளையாடினார், 2012 நவம்பரில் அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் அடித்ததில் இருந்து ஒரு ஐம்பது கூட எடுக்கவில்லை. நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா, மற்றும் துணைக் கண்டத்திற்கு வெளியே சேவாக்கின் செயல்திறன் குறைந்து கொண்டே இருந்தது.

உண்மையில், ஆசியாவிற்கு வெளியே அவரது கடைசி சதம் ஜனவரி 2008 இல் அடிலெய்டில் அடிக்கப்பட்டது தான். மேலும், அகமதாபாத்தில் அடித்த சேவாக்கின் சதம் 17 டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்த முதல் சதமாகும். அப்போது, முரளி விஜய் ஒரு தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்க, ஷிகர் தவான் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 174 பந்துகளில் 187 ரன்களுடன் விளாச, சேவாக்கிற்கு அப்போதே முடிவுரை எழுதப்பட்டது.

சேவாக்கின் வெற்றிகரமான தொடர் 2007ல் நடந்த ஐ.சி.சி உலக டி20 தொடராகும். அதன்பின் அவரது ஆதிக்கம் குறைய, இலங்கையில் 2012 தொடருக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடக்க ஜோடியாக தவான் மற்றும் ரோஹித் சர்மா அபாரமாக செயல்படத் துவங்கினர்.

சேவாக்கின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2012 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்புத் தொடரின் போது கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கருத்து, சேவாக், சச்சின் டெண்டுல்கர் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோரை ஒரே ஆட்டத்தில் லெவன் அணியில் சேர்ப்பது கடினம் என்று கூறியது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது. ஏனெனில் அவர்கள் களத்தில் வேகமானவர்கள் அல்ல என்ற தோனியின் கூற்று, வரவிருக்கும் விஷயங்களின் சமிக்ஞையாக இருந்தது.

சேவாக் அதற்கு சில மாதங்களுக்கு முன்பு, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்தாலும், அதன்பிறகு அவரது ரன்கள் சேகரிப்பு குறைந்தது. அதன்பிறகு அவர் ஒரு கணிசமான ஸ்கோரை மட்டுமே எடுத்து வந்தார். ஜூலை 2012ல் ஹம்பாந்தோட்டாவில் இலங்கைக்கு எதிரான 96 மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் ஏற்பட்ட தோல்வி அவரது தலைவிதியை இறுதியாக்கியது.

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங் 2010-11 ஆம் ஆண்டில் மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தினார். இது துணைக் கண்டத்திற்கு வெளியே கூட ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு கரீபியன் பயணத்தில், அவரது ஆதிக்கம் குறைந்தது. அவரது கடைசி ஏழு டெஸ்ட் போட்டிகளில் (இங்கிலாந்தில் இரண்டு மற்றும் ஆசியாவில் ஐந்து) அவரது சிறந்த பந்துவீச்சு ஃபதுல்லாவில் பங்களாதேஷுக்கு எதிராக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமே. அப்போது, ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டெஸ்ட் வாழ்க்கையில் ஒரு பெரிய தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். ரவீந்திர ஜடேஜாவும் சிறப்பாக செயல்பட, ‘டர்பனேட்டர்’ வழி விட வேண்டியிருந்தது.

அஸ்வின் டெஸ்ட் அறிமுகத்திற்கான கதவைத் திறந்த ஹர்பஜனின் மோசமான செயல்பாட்டால் ஆஸ்திரேலியாவுக்கான சுற்றுப்பயணத்தில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர் டெஸ்ட் அரங்கில் மறுபிரவேசம் செய்தார், ஆனால் அஸ்வின் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக ஆனதால் அவர் உச்சத்தை கடந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

சென்னையில திட்டமிடுறோம் ; துபாயில கப்பை தூக்குறோம் – CSK அசத்தல் திட்டம்

ஆனால் 2011 உலகக் கோப்பைக்குப் பின்னர் அவரது கடைசி 10 ஒருநாள் போட்டிகளில், மேட்ச் டர்னிங் என்று அழைக்கப்படும் எந்த திருப்பு முனையையும் அவர் ஏற்படுத்தவில்லை. அவர் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்டார், மேலும் 2015 உலகக் கோப்பைத் தொடரிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இது அவர் தேர்வாளர்களின் பார்வையில் முதல் ஆப்ஷன் வீரர் அல்ல என்பதை அடையாளம் காட்டியது.

2011 இல் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அவர் 3/32 விக்கெட்டுகள் எடுத்ததைத் தவிர, ஹர்பஜன் தனது ஒருநாள் வாழ்க்கையின் மோசமான முடிவில் ஒரு ஆட்டத்தில் கூட இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் எடுக்கவில்லை. அக்டோபரில் மும்பையில் நடந்த ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில், ஏபி டிவில்லியர்ஸ், குயின்டன் டி காக் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோரால் - மற்ற இந்திய பந்து வீச்சாளர்களைப் போலவே அவரும் அடித்து விளாசப்பட்டார்.

டி 20 போட்டிகளில் அவர் பவுலராக செயல்பட்டதை விட, பேட்ஸ்மேனாக சிறப்பாக செயல்பட்டார். யுவேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் டி20களில் ஆதிக்கம் செலுத்த, அதன்பின் ஹர்பஜனுக்கு எந்த வழியும் இல்லை.

ஜாகீர் கான்

ஜாகீர் கான் தனது அபாரமான டெஸ்ட் வாழ்க்கை முழுவதும் தனது உடலை எதிர்த்துப் போராடினார், ஆனால் முடிவின் தொடக்கத்தை ஒரு தேதியில் காணலாம்: ஜூலை 21, 2011.

புதிதாக முடிசூட்டப்பட்ட 50 ஓவர்கள் உலக சாம்பியன்கள் நான்கு டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தில் இருந்தனர், ஜாகீர் தலைமையிலான சக்திவாய்ந்த இந்திய பந்துவீச்சு தாக்குதலின் அடிப்படையில் அத்தொடரின் வெற்றிக்கு வாய்ப்புகள் இருப்பதாக பேசப்பட்டது.

ஆனால் தொடரின் தொடக்க நாளிலேயே அந்த லட்சியங்கள் சிதைந்தன, ஜாகீர் லார்ட்ஸில் காயத்துடன் வெளியேறினார். இந்தியா 0-4 என்ற கணக்கில் வீழ்ந்தது.

இந்த காயம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிக மோசமான அடியாகும். அதே ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு ஜாகீர் திரும்பினார்,

அதன்பிறகு சொந்த மண்ணில், எதிரணிகளை வெளியேற்ற இந்தியா ஸ்பின் பந்துவீச்சை நம்பியதால் ஜாகீருக்கு அதிகம் செய்ய வாய்ப்பில்லாமல் போனது.

அதன்பின் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்தில், இந்தியா ஆதிக்கம் செலுத்தினாலும், வெற்றிகரமான முடிவைப் பெற முடியவில்லை. வெலிங்டனில், இந்தியா ஒரு பெரிய முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றது, இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்தை  100 க்கு கீழ் அவுட் செய்திருந்தாலும், பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் பிஜே வாட்லிங் இடையிலான அபார பார்ட்னர்ஷிப் எல்லாவற்றையும் தகர்த்தது. கேப்டன் மெக்கல்லம் முச்சதம் விளாசினார்.

ஃ பிட்னஸ் ஜாகீரை வீழ்த்துவது என்பது இப்போது தெளிவாகத் தெரிந்தது. அவரது வேகம் கணிசமாகக் குறைந்தது. முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், சிறப்பான வருகையை பதிவு செய்தனர். ஜாகீர் - இப்போது 30 களின் நடுப்பகுதியைக் கடந்தார் - அணியில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.

இந்த நான்கு வீரர்களின் வாழ்க்கையிலும் ஒரு பொதுவான தீம் 2011 உலகக் கோப்பை ஆகும். இந்த வீரர்கள் அனைவரும், ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியா உலகக் கோப்பையை உச்சிமுகர அணிக்கு பங்காற்றியவர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Yuvraj Singh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment