உடல் எடை அதிகரித்திருப்பவர்கள் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது மாத்திரை உட்கொண்டு எடையை குறைக்கலாமா என எதிர்பார்க்கின்றனர்.
ஆனால், உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் மற்றும் சீரான உடற்பயிற்சிகளின் மூலமாக தான் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். அதன்படி, உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 4 விஷயங்களை பற்றி கூறுகிறார்.
இதுகுறித்து அவர் டெய்ஸி ஹாஸ்பிட்டல் சென்னை யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
- தண்ணீர் - உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேவையான நேரத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் வயிறு நிறைவாக இருக்கும். தேவையில்லாத உணவு சாப்பிட தூண்டாது.
- உடற்பயிற்சி - அன்றாடம் 20 நிமிடம் உடற்பயிற்சி இருக்க வேண்டும். இதனை தினசரி கடைபிடிக்க வேண்டும். அதுவும் உடற்பயிற்சியின்போது கட்டாயம் வியர்வை வெளியேற வேண்டும்.
- 6-6 பிளான் - மாலை 6 மணிக்கு சாப்பிட தொடங்கி 6.30க்குள் முடிக்க வேண்டும்.
- சாப்பிட்ட பிறகு நடை பயிற்சி - மூன்று வேளையும் சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி கட்டாயம் தேவை.
Very simple weight loss tips #daisy #food #daisyhospital #cure #healthyfood #doctor
இவற்றை தொடர்ந்து பின்பற்றி வர உடல் எடையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இதனை தொடர்ந்து செய்ய வேண்டும். இதுதவிர நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடல் பயிற்சி செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.