தென்னிந்திய திரையுலகில் 90களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை சோனா. ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் குறைவாக இருந்த போது ஒன்றிரண்டு சீன்களில் நடித்து கொண்டிருந்தவர், பிறகு தன்னுடைய நடிப்பு திறமையால், அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இப்படியாக ஆரம்பித்த அவரது சினிமா பயணம் அவரை ஒரு கவர்ச்சி நடிகையாகவே காட்டியது. காமெடி ரோலில் நடித்தாலும்கூட, கிளாமரையும் காட்டி நடித்திருந்தால், கவர்ச்சி நடிகை என்ற முத்திரையே இவர்மீது விழுந்துவிட்டது.
இவரது உடல் எடை அதிகரித்து இருந்ததால் கடந்த சில ஆண்டுகளாகவே இவர் உடல் எடையில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்படியாக அவர் தனது உடல் எடையையும் உடலில் சேறும் தேவையில்லாத கொழுப்புகளை கரைக்கவும் எடுத்து கொள்ளும் ஒரு டிப்ஸ் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தண்ணீர்
சுக்கு பொடி
கருஞ்சீரகப்பொடி
மஞ்சள் தூள்
எலுமிச்சை சாறு
செய்முறை
தேவையான அளவு சுடுதண்ணீர் எடுத்து அதில் சுக்கு பொடி, கருஞ்சீரகம் பொடி, மஞ்சள் தூள் மூன்றையும் அதில் சேர்த்து கொதிக்க விடாமல் சூடாக்கி இறக்கவும்.
பின்னர் இதனை வடிக்கட்டி அதில் அரை எலுமிச்சை பழம் சாறு சேர்த்து இரவில் தூங்குவதற்கு முன் குடிக்கலாம்.
Actress sona secret weight loss drink
குறிப்பாக இதை தினமும் குடிக்க கூடாது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை குடிக்கலாம். உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.