சர்க்கரை நோயாளிகளின் அன்றாடக் கவலைகளில் ஒன்றாக இடம் பெற்றுவிட்டது அவர்களுடைய ரத்தத்தில் சாப்பிடுவதற்கு முன் சர்க்கரை அளவு, சாப்பிட்ட பிறகு சர்க்கரையின் அளவு எவ்வளவு என்று சரிபார்ப்பது என்பது வழக்கமாகி விட்டது.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் அளவாக சாப்பிட வேண்டும், சர்க்கரை அளவை அதிகரிக்காத உணவுகளை சாப்பிட வேண்டும் என்று கவனமாகச் சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பிறகு சுகர் அதிகரிக்ககூடாது என்ற கவனத்துடன் இருப்பார்கள். அதனால், சர்க்கரை நோயாளிகளுக்காக இந்த டிப்ஸ்… சாப்பிட்டு முக்கால் மணி நேரத்திற்கு பிறகு ஓமம் குடியுங்கள். கவலை இல்லாமல் இருங்கள். என்னென்ன பலன்கள் என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
அஜ்வைன் அல்லது கேரம் விதைகள் அல்லது ஓமம் என்கிற பெருஞ்சீரகம் செரிமானத்திற்கு நன்மை பயக்கும். அதோடு, வாயுவைக் குறைக்கும். அதுமட்டுமல்ல, ஓமம் இரத்தத்தில் சர்க்கரையை சீராக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஓமம் எப்படி உதவுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
அஜ்வைன் என்கிற கேரம் விதைகள் ஓமம் அதாவது பெருஞ்சீரகம் அஜீரணத்துக்கு மட்டுமல்ல மேலும் சில நன்மைகளையும் தருகிறது. ஓமத்தில் நம்முடைய உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல நன்மைகள் உள்ளன.
கேரம் விதைகள் அல்லது ஓமம் காரமான சுவை கொண்டது. வாயு மற்றும் அஜீரணத்திற்கு சிகிச்சையளிக்க, நீங்கள் அரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு சிட்டிகை உப்புடன் மென்று சாப்பிட வேண்டும். வெதுவெதுப்பான நீரை அருந்தினால் சில நிமிடங்களில் வாயு குறையும்.
ஓமம் ஒரு பொதுவாக சமையலில் பயன்படுத்தப்படும் பொருள். ஓமம் ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஓமம் வாயுவை மட்டுமல்ல, அசிடிட்டி, வாய்வு மற்றும் வீக்கம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
லைஃப்ஸ்டைல் பயிற்சியாளர் லூக் குடின்ஹோ ஓமத்தின் பயன்களைப் பற்றிக் கூறுகிறார்.
- சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஓமம் சிறந்தது. உணவுக்குப் பிறகு ஓமம் தேநீர் குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று குடின்ஹோ வீடியோவில் கூறுகிறார். அஜ்வைன் அல்லது கேரம் விதைகள் அல்லது ஓமம் தேநீர் தயாரிக்க, உங்களுக்கு ஒரு டீஸ்பூன் பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் நான்கில் ஒரு பங்கு இலவங்கப்பட்டை தூள் தேவை. இந்த பொருட்கள் அனைத்தையும் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து தேநீர் காய்ச்சவும். நீங்கள் சாப்பிட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு இதை குடியுங்கள். மக்கள் தங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதாகக் கூறுகிறார்கள் என்று குடின்ஹோ வீடியோவில் கூறுகிறார்.
- இது அஜீரண பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்
அசிடிட்டி, வாயு மற்றும் வீக்கம் மட்டுமல்ல, அஜ்வைன்ஸ் விதைகள் வயிற்று வலியைப் போக்க உதவும்.
- அஜ்வைன் விதைகளை மென்று சாப்பிடுவது அமிலத்தன்மையை குறைக்க உதவும். வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு ஓமம் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் பிள்ளைக்கு வயிற்று வலி வயிறு உப்பசம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால், தண்ணீர் அல்லது சில அஜ்வைன் விதைகளை மெல்ல கொடுக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"