scorecardresearch

நெல்லிக்காய், மஞ்சள்… சுகர் பேஷண்ட்ஸ் இப்படி சேர்த்து சாப்பிடுங்க!

நெல்லிக்காய், மஞ்சள், அஸ்வகந்தா, வேம்பு… சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் மூலிகைகளின் பட்டியல் இங்கே

Ayurvedic practitioner shares herbs that will help manage diabetes: பல பாரம்பரிய இந்திய மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் உட்கொண்டால், அவை ஜலதோஷம், காய்ச்சல், இரத்த சர்க்கரை அளவு போன்ற சுகாதார பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளன. அவை இந்த சுகாதார பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத நன்மைகளை தன்னகத்தேக் கொண்டுள்ளன.

இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, ஆயுர்வேத டாக்டர் டிக்ஸா பவ்சர், ஒருவருடைய உணவில் சில மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை சேர்ப்பது வாழ்வியல் சிக்கல்களான சில பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வாகிறது என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள்: இதயம், கல்லீரல், கணைய நோயை விரட்டும் வில்வ பழம்… எப்படி சாப்பிடுவது?

“நான் சமீபத்தில் பல நீரிழிவு நோயாளிகளுடன் ஆலோசனை செய்து வருகிறேன், கணையத்தின் செயல்திறன் மற்றும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதன் மூலம் சர்க்கரை அளவைக் குறைப்பதில் எனக்கு அற்புதமான முடிவுகளைத் தந்த சில மூலிகைகள் இங்கே உள்ளன” என்று டாக்டர் பாவ்சர் இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

அமிர்தவல்லி: சுவையில் கசப்பானது ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி உடையது, மேலும், சர்க்கரை அளவு, இருமல்/சளி, கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றுக்கு சிறந்தது.

amla 2 - unsplash (1)

நெல்லிக்காய் மற்றும் மஞ்சள்: சம அளவு நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் கலவையானது நிஷா அமல்கி என்று அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய்க்கு எதிரான பல மருந்துகளில் இதுவும் ஒன்று.

திரிபலா, தாமிரவல்லி மற்றும் நெருஞ்சில் ஆகியவை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு நச்சு நீக்கும் அற்புதமான மூலிகைகள்.

திரிகடுகம்: சுக்கு, பிப்பிலி மற்றும் மிளகு சர்க்கரை நோய்க்கு எதிரான மசாலாப் பொருட்கள். அவை வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகின்றன.

வேம்பு மற்றும் சிறுகுறிஞ்சான்: அவை சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் அற்புதமான, கசப்பான மூலிகைகள்.

அஸ்வகந்தா: இது மன அழுத்தம், சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துதல் மற்றும் இன்சுலின் உணர்திறனை ஒரே நேரத்தில் குறைக்க உதவுகிறது.

கறிவேப்பிலை, முருங்கைக்காய், இலவங்கப்பட்டை, வெந்தயம், மருதமரம் போன்றவை நீரிழிவு நோய்க்கு பயனுள்ளதாக இருக்கும் சில மூலிகைகள், இந்த மூலிகைகள் அனைத்தும் நீரிழிவு நோய்க்கு சிறந்தது, ஒற்றை மூலிகைகளாகவோ அல்லது கலவையாகவோ பயன்படுத்தப்படலாம் என்று டாக்டர் கூறினார்.

”இவை அனைத்திலும் உங்களுக்கு எது பொருத்தமானது மற்றும் உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அதைக் கண்டுபிடிக்க, ஒரு ஆயுர்வேத பயிற்சியாளரை அணுகவும். தயவு செய்து சுயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று டாக்டர் அறிவுறுத்தினார்.

மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Ayurveda herbs spices manage diabetes immunity blood sugar