scorecardresearch

இதயம், கல்லீரல், கணைய நோயை விரட்டும் வில்வ பழம்… எப்படி சாப்பிடுவது?

Top medical and health benefits of Vilvam Fruit in tamil: வில்வ பழத்தில் சர்பத் செய்தால், அவை இதய நோய்க்கும், இதய ஓட்டையை அடைக்கவும், கல்லீரல் மற்றும் கணைய நோய்களை போக்கவும் பயன்படுகிறது.

Vilvam Fruit benefits and how to eat it in tamil
bael or Vilvam Fruit Benefits in tamil

Vilvam Fruit benefits in tamil: வில்வம் என்றால் உயிர் என்று பொருள். உயிரைப் பாதுகாக்கக்கூடிய பிராணசத்து வில்வத்தில் அதிகம் உண்டு. வில்வ மரத்தில் தான் ஈஸ்வரன் உருவானதாக சிதம்பர ரகசியம் சொல்கிறது. தத்துவ ரீதியாகப் பார்க்கும்போது ருத்திரன் குடி கொண்டிருப்பது கழுத்துக்கு மேல் பாகம். அது பிராண வாயு இருப்பிடம். உடலிலுள்ள பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன், கூர்மன், நாகன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்துவிதமான நீராவி முறையில் இயங்கக்கூடியது மனித உடலாகும்.

பிராணன் தலையிலும், அபானன் குதப்பையிலும் (மலப்பை, நீர்ப்பை) ஒழுங்காகச் செயல்பட்டால்தான் உடலே ஒழுங்காகச் செயல்படும். பிராண சத்து அதிகமாக வில்வத்தில் உள்ளது. அதன் சுவை கார்ப்பு பொருந்திய கசப்புத் தன்மையாகும். வில்வத்தில் பத்து வகைகள் உள்ளன. அவை சாதா வில்வம், காசி வில்வம், மகா வில்வம், மா வில்வம், பஞ்ச பத்திரி, சப்தபுத்திரி, அஷ்டபத்திரி, நவவில்வம், தசவில்வம், கற்பூர வில்வம் ஆகியவை ஆகும். மர்மெலாஸ். இதன் தாவரவியல் பெயர் ஆக்லெமர்மெலாஸ்.

மனித உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நரம்புகளின் இரத்த அலைகளில் உருவாகும் ஏற்ற இறக்கங்களைச் சரிப்படுத்தி உடலை ஆரோக்கியமாகவும் மேனியை அழகாகவும் இருக்கச் செய்கிறது. இதனுடைய கொழுந்து பெண்களுக்கு வரும் மாத கால வயிற்று வலிக்கு சிறந்தது. இந்த நாளில் மூன்று நாள் முதல் ஐந்து நாள் வரை தினமும் காலையில் குளித்த பிறகு ஒரு சுண்டைக்காய் அளவு வில்வக் கொழுந்தை அரைத்து பாலில் கலந்து கொடுத்தால் மாதகால வயிற்று வலி நீங்கி “கரு” உண்டாக வாய்ப்பு ஏற்படுகிறது.

வில்வ இலை ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுவைச் சேர்க்கும். ஏழு நாளைக்கு வில்வ இலையை காலையில் அரைத்து சுண்டைக்காய் அளவு பாலில் குடிக்க நீர்த்துப்போய் உள்ள விந்து கெட்டிப்படுவதோடு விந்துவில் உயிரணுவைச் சேர்க்கும்.

ஈஸ்வரன் கோயிலில் விபூதியாகக் கொடுப்பது சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்பட்டது ஆகும். ஆன்மீக மருந்தாக இது பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வில்வ பழத்தில்தான் தயாரிக்கப்படுகிறது. இந்த பழத்தை ஓடு நீக்காமல் பாதியாக உடைத்து வெள்ளைத் துணியைச் சுற்றி விட்டு அதன் மேல் களிமண் பூசி நன்றாக காயவைத்து இருபது வரட்டியில் புடம் வைத்தால் நல்ல வெண்மையான பஸ்பமாகும். இந்த பஸ்பம்தான் ஈஸ்வரன் கோவிலில் கொடுக்கப்படும் விபூதி ஆகும். அப்படிக் கொடுக்கப்படும் விபூதிக்கும் மற்ற விபூதிக்கும் வேறுபாடு உண்டு.

உடல் இந்த விபூதியை மன அமைதி, அமைதி இல்லாதவர்கள் சிட்டிகை வாயில் போட்டால் நாக்கிலுள்ள புளி, காரம், இனிப்பு, கசப்பு ஆகிய நான்கு விதமான சுவைகளை சம நிலைக்கு கொண்டு வந்து (தைராய்டு) போதகத்தை சமப்படுத்துவதால் உமிழ்நீர் மிகுதியாக சுரக்கிறது. உமிழ்நீர் மிகுதியாகச் சுரந்தால் உடலிலுள்ள இருபத்தேழு இரசாயன மாற்றமும் தன் நிலைக்கு வரும். அவ்வாறு சுரந்தால் உடல் குற்றம் நீங்கும். எனவே தான் நாம் கோவிலுக்கு சென்றால் மனம் திருப்தியாக உள்ளது. இந்த நிலை கோவிலிலுள்ள சிலையால் அல்ல. கோவிலில் கொடுக்கப்பட்ட உண்டாகிறது. சித்த மருந்தால்

இந்த விபூதியை வாயில் போட்டு, நெற்றியிலிட்டு கையில் வைத்து தேய்த்துத் தட்டு என்று கூறுகிறோம். வாயில் போட்ட உடனே ஒருவருக்கு இனிப்பாகவும், மற்றொருவருக்கு காரமாகவும் இன்னொருவருக்கு புளிப்பாகவும் தோன்றும். இதில் எந்த சுவை’ தோன்றுகிறதோ அந்தச் சுவை உள்ள உணவை உட்கொண்டால் உடலில் உள்ள நோய் தீரும். நெற்றியில் பூசும் திருநீறு திருநீறாகவே இருந்தால் கருமத்தில் நோயில்லை. அந்த விபூதி நீல நிறமாகவோ, அல்லது கருமை நிறமாகவோ அல்லது வெண்மை நிறமாகவோ மாறுமானால் நிறத்திற்கு ஏற்றாற் போல் நோய்களைக் குறிக்கும் என்பது சித்த மருத்துவம்.

இந்த விபூதி வெண்மையாக மாறினால் கபநோய் என்றும், நீல நிறமாக மாறினால் பித்தவாத நோய் என்றும் கூறுகிறோம். இதை உணர்ந்து எந்த நிறம் வருகிறதோ அதற்கு ஏற்றாற்போல் மருந்து சாப்பிட்டால் நோய்கள் நீங்கும். அந்த விபூதியை கையில் தடவி தட்டு என்று கூறினால் கையில் தடவிவிட்டு ஒவ்வொருவரும் முகர்ந்து பார்த்தால் ஒருவிதமான வாசனை தோன்றும். கற்பூரம், சாம்பிராணி, துர் வாடை, விபூதி வாசனை வரும். விபூதி வாசனை வந்தால் நோயில்லை என்றும், கற்பூரம் வாசனை வந்தால் வாத நோய் என்றும் சாம்பிராணி வாசனை வந்தால் பித்தம் என்றும், துர்வாடை வந்தால் கபநோய் என்றும் அறியலாம். இப்படி வரக்காரணம் உடலில் பிராணன் இல்லாததும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததும் ஆகும். இந்த விபூதியைப் பூசிய உடனே உடலில் நோய் உள்ளதா இல்லையா என்று கண்டுகொள்ளும் வகையில் கோவிலில் இதைப் பயன்படுத்தினர்.

ஆனால், இன்று உருவாக்கப்படும் விபூதியின் நிலை வேறு. மாட்டுச்சாணம், நெல், உமி, சாம்பல், செய்யப்பட்ட களிமண்ணால் சாம்பலும் இன்று விபூதியாகி, வாசனை திரவியங்கள் கலந்து கொடுக்கப்படுவதால் அதிலிருந்து எந்தவித நோயும் கணிக்க முடியாது. இது வியாபாரத்தற்கு உகந்ததே தவிர மருத்துவத்திற்கு ஏற்றதல்ல. இம்மருத்துவ குணம் இல்லாத விபூதியைப் பூசினால் தோல் நோய்களை உண்டாக்கிக் கொள்வதற்கு நாமே காரணமாக அமைந்து விடுகிறோம்.

பஞ்சபூத தெய்வ விருட்சங்கள் ஐந்து. இதில் வில்வம்தான் முதலிடம் பெறுகிறது. இதைச் சாப்பிட்டால் தான் நோய் தீரும் என்பதில்லை. இதன் நிழலில் வந்து ஐந்து நிமிடம் இருந்தாலே பிராண வாயுவைச் சமன் செய்யும். இதனால்தான் இவை கோவில்களில் வளர்க்கப்படுகின்றன.
மா, பலா, வாழை என இலக்கியத்தில் குறிப்பிடும் “மா” மாம்பழத்தை குறிக்கும். ஆனால், சித்த மருத்துவத்தில் குறிப்பிடும் “மா” என்பது மா வில்வத்தைக் குறிக்கும். இதன் காய் பூசணிக்காய் அளவு இருக்கும். இதில் இரண்டு லிட்டர் தேன் இருக்கும். இந்த “மா”வில் ஆயிரம் காய்க்கு ஒரு காயில்தான் விதை இருக்கும். உலகில் பல மரங்கள் சில வருடங்கள்தான் உயிருடன் இருக்கும். பிறகு பட்டுப்போய் விடும். ஆனால் வில்வமும் தாளிப்பனையும் ஆயிரம் வருடங்கள் உயிருடன் இருக்கும். இவைதான் கோவிலில் வைக்கப்படும். தாளிப்பனை குலைவிட ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

சாதா வில்வ பழத்தில் சித்த பிரமையைப் போக்கலாம். ஐந்து பழத்தை நெருப்பில் போட்டு அது வெந்து வெடிக்கும் சமயத்தில் எடுத்து உடைத்து உள்ளே உள்ள சதையைத் தலையில் சூடு பொறுக்கும் அளவு இரவில் இதமாக வைத்து கட்டினால் ஏழு நாளில் சித்தப்பிரமை (பைத்தியம்) குணமாகும். மேலும் இதனை மருத்துவ முறையில் பயன்படுத்தினால் பால்வினை நோய்கள் அனைத்தும் ஆண், பெண் இரு பாலருக்கும் மூன்றே நாளில் பரிபூரண குணமாகும்.

வில்வ பழத்தில் சர்பத் செய்தால் அது இருதய நோய்க்கும், இருதய ஓட்டையை அடைக்கவும் கல்லீரல், கணைய நோய்களுக்கும் பயன்படும்.

இதைப் பயன்படுத்தினால் மனிதனுக்கு வரக்கூடிய 4 ஆயிரத்து 448 விதமான நோய்களில் தக்க அனுமானத்தில் கொடுக்க ஆயிரம் நோய்களைக் குணமாக்கவல்லது வில்வம். இந்த வில்வத்தின் பிசினைப் பொடி செய்து பெயின்டில் கலந்து பயன்படுத்தினால் என்றைக்கும் நிறம் மாறாது; அழியவும் செய்யாது. கோவிலில் வரையப்பட்ட ஓவியங்களில் இருந்து வில்வத்தின் பிராணன் வெளிப்பட்டு கோவிலுக்குச் செல்பவர்கள் நலன் அடைவர். இதனால்தான் புராதன கோவில்களில் இந்த வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

ஆயுர்வேத மருத்துவர் கௌதமன்</strong>
மேலே வழங்கப்பட்டுள்ள மருத்துவ குறிப்புகளை வழங்கியவர் "ஆயுர்வேத மருத்துவர் கௌதமன்" ஆவர். சென்னையைச் சேர்ந்த இவர் ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக செயலாற்றி வருகிறார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Vilvam fruit benefits and how to eat it in tamil