கெட்ட கொழுப்பு கரைந்து நல்ல கொழுப்பு நம் உடலில் கூடுவதற்கு பாதாம் உதவுவதாக டாக்டர் சிவராமன் ட்ரெண்ட்கேர் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
Advertisment
பாதாம், நல்ல கொலஸ்ட்ரால் (HDL) அளவை அதிகரிக்கவும், கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) அளவைக் குறைக்கவும் உதவும், மேலும் இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த தினமும் இரவில் பாதாமை ஊறவைத்து விட்டு காலையில் சாப்பிடலாம்.
கொழுப்புப் பொருள்களை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம், குறிப்பாக நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள் சாப்பிடக்கூடாது. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த, நிறைவுற்ற கொழுப்பைக் குறைத்து, நார்ச்சத்து, நல்ல கொழுப்பு, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும்.
கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்ல பலனை தரும். நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி செய்து கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும். நல்ல நடைப்பயிற்சி கூட கெட்ட கொழுப்பை எரிக்க உதவுவதாக டாக்டர் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.