உடலுக்கு பாதாம் மற்று நிலக்கடலை இரண்டில் எது நல்லது என்று மருத்துவர் முரளி கூறுவது பற்றி பார்ப்போம்.
நிலக்கடலை மற்றும் பாதாம் இரண்டுமே நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது தான். அப்படி இருக்க இதயத்திற்கு நன்மை, சர்க்கரை கட்டுப்பாடு, கொலஸ்ட்ரால் குறைப்பு, உடல் எடை குறைப்பு, எலும்புகளை பாதுகாக்க, புரதச்சத்து இதற்கெல்லாம் எது சிறந்தது என்று பார்ப்போம்.
பாதாமில் வைட்டமின் இ,இரும்பு, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன. அதேபோல வேர்க்கடலையிலும் வைட்டமின் ஈ, மக்னீசியம், சலனியம், காப்பர்,ஜிங்க் போன்ற சத்துக்கள் உள்ளன.
இதயத்தை பாதுகாப்பது எதில் சிறந்தது என்று பார்ப்போம். பாதாமில் அதிக வைட்டமின் சத்து நிறைந்துள்ளது. இது இரண்டுமே இதய நலனுக்கு நல்லது வேர்க்கடலையும் இதய நலனுக்கு நல்லது.
இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கு பாதாம் உதவும். ரத்த குழாய்கள் விரிவடைய ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். அதேபோல நிலக்கடலையில் மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் ரத்த அளவு ரத்த கொதிப்பு கட்டுப்படுத்த உதவும். உப்பு இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.
உடலில் கொழுப்பு அளவை குறைப்பதற்கு பாதாம் சிறந்தது. மேலும் கொலஸ்ட்ரால் உண்டு செய்வதை தடுக்கும்.
எடை குறைப்பு பாதாமில் நார்ச்சத்து அதிகம் உள்ளது சாப்பிட்ட உடனே ஒரு திருப்தி உணர்வை உண்டாக்கும். நிலக்கடலையில் புரதம் அதிகமாக உள்ளது எனவே அதிகம் சாப்பிடக்கூடாது.
சர்க்கரை கட்டுப்பாடு இரண்டுமே கிளைசிமிக் இன்டெக்ஸ் கம்மியாக உள்ள பொருட்கள் தான் எனவே இரண்டையும் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். ஆனால் நிலக்கடலை சற்று குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
எலும்புகள் ஆரோக்கியம். பாதாமில் கால்சியம், மெக்னீசியம் அதிகம் உள்ளதால் எலும்புகளை வலிமைப்படுத்தும். நிலக்கடலையில் இது இரண்டும் உள்ளது. ஆனால் குறைவாக உள்ளது. ஜீரணம் பாதாம் ஜீரண சக்திக்கு உதவும்.
அலர்ஜி வரும் வாய்ப்பு பாதாமில் குறைவு. நிலக்கடலையில் சற்று அதிகம் ஒத்துக் கொள்ளாதவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது.
ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அளவு சாப்பிடலாம் அதாவது 28.5 கிராம் எடுத்துக் கொள்ளலாம். பச்சையாக சாப்பிடலாம் அல்லது ஊறவைத்து தோல் உரித்து சாப்பிடலாம். நிலக்கடலை வேகவைத்து சாப்பிடக்கூடாது. குறிப்பிட்ட அனைத்திற்கும் வேர்க்கடலை பாதாம் இரண்டுமே உதவிகிறது ஒவ்வொரு சத்துக்களின் அளவு தான் மாறுபடுகிறது.
நிறைய நார்ச்சத்து உள்ள உணவுகள் வேண்டும் என்றால் பாதாமை உட்கொள்ளலாம். அதே நேரம் விலை குறைந்த கட்டுப்படியான அதிக புரதம் நிறைந்த உணவு வேண்டும் என்றால் நிலக்கடலையை தேர்ந்தெடுக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“