தொப்பையை குறைக்க போராடும் மக்களே... வாரத்தில் 2 முறை மட்டும் இந்த தோசை; சூப்பர் மாற்றம்!

தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்காகவே ஒரு தோசை. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தாலே உடல் எடையில் நல்ல மாற்றம் நிகழும்.

தொப்பையை குறைக்க நினைப்பவர்களுக்காகவே ஒரு தோசை. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம். வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தாலே உடல் எடையில் நல்ல மாற்றம் நிகழும்.

author-image
WebDesk
New Update
dosa

உடல் எடையைக் குறைப்பதிலும், ஆரோக்கியமான வாழ்விலும் கொள்ளு முக்கியப் பங்காற்றுகிறது. சத்தான மற்றும் சுவையான கொள்ளு அடை தோசை எப்படி செய்வது என்று சென்னை அடை தோசை இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள்:

முளைகட்டிய கொள்ளு  
பச்சை மிளகாய்  
பூண்டு - சில பற்கள்
சோம்பு - சிறிதளவு
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
ராகி மாவு - 2 ஸ்பூன் (அடையை மிருதுவாக்க)
கேரட் - சிறிதளவு (துருவியது அல்லது பொடியாக நறுக்கியது)
பீன்ஸ் - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - அடை சுடுவதற்கு

செய்முறை:

Advertisment
Advertisements

இரவில் ஊறவைத்து முளைகட்டிய கொள்ளுடன், பச்சை மிளகாய், பூண்டு, சோம்பு, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகம் சேர்க்கத் தேவையில்லை, ஏனெனில் கொள்ளு ஏற்கனவே ஊறியிருக்கும்.

அரைத்த கொள்ளு கலவையுடன், 2 ஸ்பூன் ராகி மாவு, துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ் (உங்களுக்கு பிடித்த வேறு எந்த காய்கறிகளையும் சேர்க்கலாம்), தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்கவும். மாவு மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது தண்ணீர் சேர்த்து அடையின் பதத்திற்கு சரிசெய்யலாம்.

வாழை இலை அல்லது பட்டர் ஷீட்டைப் பயன்படுத்தி, அடை மாவை மெல்லியதாகவும் வட்டமாகவும் தட்டவும். அடை எல்லா பக்கமும் சமமாக வேக, தட்டிய அடையில் மூன்று அல்லது நான்கு சிறிய ஓட்டைகளைப் போடவும். சூடான தோசைக்கல்லில் தட்டிய அடையைப் போடவும். பட்டர் ஷீட்டை எளிதாக அகற்றலாம். 

அடையில் சிறிது எண்ணெய் சேர்த்து, இருபுறமும் பொன்னிறமாக மற்றும் மொறுமொறுப்பாக வேகும் வரை சுட்டு எடுக்கவும். இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான கொள்ளு அடையை காரமான சட்னியுடன் சேர்த்துப் பரிமாறலாம். வாரம் இருமுறை இந்த அடையை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும்.

Foods that helps lose belly fat belly fat

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: