சிலருக்கு உடல் பருமன் அதிகமாக இருக்கும் அதிலும் சிலருக்கு வயிற்று பகுதியில் தொப்பை போடும் பிரச்சனை இருக்கும். அதை எப்படி சரி செய்வது என்று டாக்டர் நித்யா மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
வயிற்று பகுதியில் அதிக தொப்பை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். நிறைய பேருக்கு தொப்பை இருக்கும். இதனால் அடிவயிற்று பகுதியில் எரிச்சல், சிறு புண்கள், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை போன்றவை ஏற்பட வாய்ப்பு இருக்கும்.
உடலில் இருக்கக்கூடிய தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற வேண்டும். இதற்கு முதலில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யலாம். பின்னர் ஒரு டிரிங் எப்படி செய்வது என்று பார்ப்போம்
இதை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வறுத்து பவுடர் மாதிரி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இதில் உள்ள வலம்புரிக்காய் குடலில் கொழுப்பை கரைத்து வெளியேற்றும். மரமஞ்சள் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். இதை தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு காலை மாலை இருவேளைகளில் டீ குடிக்கும் நேரங்களில் குடிக்கலாம்.
இதனால் குடல் பகுதி சுத்தமாகும், வாதம் குறையும் மூட்டு வலிகள் நீங்கும். உடல் உஷ்ணம் குறையும், மலச்சிக்கல் சீராகும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் இதை குடித்து வர உடல் எடையில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.