சிறுநீரக தொற்றை விரட்டும் இந்தக் கீரையின் ரெசிபிக்கள்... இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

சிறுநீரக தொற்ரை விரட்டும் ஒரு கீரையை பற்றி பார்ப்போம். அந்த கீரையில் என்னவெல்லாம் ரெசிப்பிக்கள் செய்யலாம் என்றும் பார்க்கலாம்.

சிறுநீரக தொற்ரை விரட்டும் ஒரு கீரையை பற்றி பார்ப்போம். அந்த கீரையில் என்னவெல்லாம் ரெசிப்பிக்கள் செய்யலாம் என்றும் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
kidney health

மூக்கிரட்டை கீரை அதன் ஆரோக்கிய நன்மைகளுக்காக சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகையாகும். சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இருந்து உடல் எடையைக் குறைப்பது வரை, இந்த கீரையின் பயன்பாடுகள் ஏராளம்.

Advertisment

மூக்கிரட்டை கீரை சூப்: சிறுநீரகங்கள் ஆரோக்கியமாகச் செயல்பட மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளை சூப்பாகவோ அல்லது கடைந்தோ உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நீர்க்கடுப்பு மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் உள்ளவர்களுக்கு இந்தக் கீரை உடனடி நிவாரணம் அளிக்கும். இது இரத்தத்தில் அதிகரிக்கும் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவைக் குறைத்து, சிறுநீரகக் கற்கள் உருவாவதையும், சிறுநீரகத் தொற்று நோய்கள் வருவதையும் தடுக்க உதவுகிறது.

சூப் தயாரிக்க தேவையான பொருட்கள்:

மூக்கிரட்டை கீரை: 1 கப்
தண்ணீர்: 1 கப்
உப்பு: தேவையான அளவு
மஞ்சள் தூள்: 1/2 ஸ்பூன்
மிளகுப் பொடி: 1 ஸ்பூன்
சீரகப்பொடி: 1/2 ஸ்பூன்
பூண்டு: 4 பற்கள் (தட்டியது)

Advertisment
Advertisements

செய்முறை: மூக்கிரட்டை கீரையை நன்றாக அலசி சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவிடவும். கீரை நன்கு வெந்ததும், உப்பு, மஞ்சள் தூள், தட்டிய பூண்டு, மிளகுப் பொடி, சீரகப்பொடி சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விடவும்.
பிறகு, ஒரு கனமான கரண்டி கொண்டு கீரையை நன்கு மசித்து, வடிகட்டிப் பருகவும். ஆரோக்கியமான மூக்கிரட்டை கீரை சூப் தயார். 

மூக்கிரட்டை கீரை கடையல்: மூக்கிரட்டை கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கடையலாகச் செய்து சாப்பிடுவது மிகவும் ருசியானது. இது உடல் எடையைக் குறைக்கவும், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் உதவும்.

கடையல் செய்ய தேவையான பொருட்கள்:

மூக்கிரட்டை கீரை
பாசிப்பருப்பு
தக்காளி
வெங்காயம்
இஞ்சி
பூண்டு
மிளகாய்த் தூள்
மஞ்சள் தூள்
சீரகம்
உப்பு
கடுகு
கறிவேப்பிலை

செய்முறை:

பாசிப்பருப்பை நன்கு கழுவி பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊறவிடவும். மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு போன்றவற்றையும் நறுக்கிக் கொள்ளவும்.

ஊறவைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய கீரை, தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய்த் தூள், சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு இரண்டு விசில் விட்டு எடுக்கவும்.

பருப்பு மற்றும் கீரை நன்கு வெந்ததும், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சிறிது சீரகம் சேர்த்து தாளித்து, வெந்த கீரைப் பருப்பு கலவையில் கொட்டவும்.

தேவையான உப்பு சேர்த்து கனமான கரண்டி கொண்டு நன்கு கடைந்து கொள்ளவும். இதனை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். 

மூக்கிரட்டை கீரை பொடி: மூக்கிரட்டை கீரையை உலர்த்தி பொடி செய்து பயன்படுத்துவது உடல் எடையைக் குறைப்பதற்கும், கண் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதற்கும் உதவுகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், கால் எரிச்சல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கவும் பயனளிக்கும். 

செய்முறை: மூக்கிரட்டை கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வெயிலில் நன்கு காய வைக்கவும். காய்ந்தவுடன் கீரையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.

இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டு பத்திரப்படுத்தலாம். வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒரு ஸ்பூன் அளவில் வெந்நீரில் கலந்து குடிக்கலாம் அல்லது சமைக்கும் ரசத்தில் கடைசியாக 2 ஸ்பூன் பொடியைச் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Foods to consume for a better kidney health Healthy green leaves to eat

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: