இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு ஆகும்.
இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது,வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் அதிகரிக்கும் கொழுப்பு போன்றவையாகும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது.
உடல் தொய்வு அடைவது அழகியல் சார்ந்த விஷயம் மட்டுமில்லை. அது ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட எனவே உடலில் சதைகள் தொங்காமல் முடிந்த வரை பார்த்து கொள்ள வேண்டும். உடலில் ஆங்காங்கே தொங்கி போய் கிடக்கும் சதைகளை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.
எனவே உடலில் சதைகள் தொங்காமல் இருக்க இதோ சில வழிமுறைகள்:
உடற்பயிற்சி; அன்றாடம் உடற்பயிற்சி கட்டாயம் செய்ய வேண்டும். எளிமையான உடற்பயிற்சிகளுடன் மூச்சு பயிற்சியும் அவசியம். நடைபயிற்சி, யோகா, சூரிய நமஸ்காரம் போன்றவை அவசியம். பொதுவாக இடுப்பு பகுதிகளில் சிலருக்கு சதை போடும் .எனவே அவர்கள் ஆரம்ப கட்டத்தில் இருந்தே இடுப்பு சதை இறுகுவதற்கு தகுந்த உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
உணவு முறை: உணவில் அதிகம் கொள்ளு சேர்த்து கொண்டால் உடல் கட்டு கோப்பாக தசை தளர்ச்சி இல்லாமல் இறுக்கமாக இருக்கும். பெண்கள் அதிகம் சாப்பிட கூடாது. மேலும் உணவில் பழங்களை அதிகம் சேர்த்து கொள்ளலாம். அரிசி உணவுகளை தவித்து புரத உணவுகளை சாப்பிடலாம்.
உணவு பழக்கத்துடன் உடற்பயிற்சி, ஆசன பயிற்சி, மூச்சு பயிற்சி செய்தால் உடலில் ஆங்காங்கே தேங்கி தொங்கி போய் இருக்கும் சதை இறுகும். சாதம் குறைவாகவும் பழங்கள், பயிர்கள் அதிகம் சாப்பிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“