முருங்கை கீரை என்றாலே அதன் சத்துக்கள் எண்ணில் அடங்காதவை அவ்வளவு சத்துக்கள் முருங்கை கீரையில் அடங்கியுள்ளது. நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் உருவாகவும், காயம்படும் காலத்தில் இரத்தம் வேகமாக உறையவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் உதவுகிறது. இப்படியாக முருங்கை கீரையின் நன்மைகளை அடுக்கி கொண்டே போகலாம்.
அப்படியாக இரும்பு சத்து அதிகமுள்ள முருங்கை கீரையை வைத்து துவையல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முருங்கை இலை
கருவேப்பிலை
கொத்தமல்லி தழை
தேங்காய்
பூண்டு இஞ்சி
எண்ணெய்
உளுத்தம் பருப்பு
வரமிளகாய்
செய்முறை
தேவையான அளவு முருங்கைக் கீரையை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு சேர்த்து அதில் வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.
பின்னர் அதில் இஞ்சி பூண்டு சிறிது கருவேப்பிலை, கொத்தமல்லி தழை அனைத்தையும் சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் முருங்கை இலைகளை சேர்த்து அதனுடன் தேங்காய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
ஒரு ஸ்பூன் போதும் 100 நோய்களை தீர்க்கும் முருங்கைக்கீரை துவையல் /recipe in Tamil
இவை அனைத்தையும் ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பின்னர் தண்ணீர் சிறிது சேர்த்து சட்னி பதத்தில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனை சுடுசாதத்துடன் சேர்த்து சிறிது எண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும். கைப்படாமல் இரண்டு நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கீரை சாப்பிட மறுப்பவர்களுக்கு இந்த மாதிரி துவையல் செய்து கொடுங்கள். வெரைட்டி ரைசுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“