கண்ணுக்கு ரொம்ப நல்லது... கேரட்டை விட பல மடங்கு சத்து இந்த அரிசில இருக்கு: மருத்துவர் சிவராமன்
கண் பார்வைக்கு நன்மை தரும் திணை அரிசி பற்றி மருத்துவர் சிவராமன் விளக்கி உள்ளார். திணை அரிசி கேரட்டை விட கண்ணுக்கு மிகவும் அதிக சத்துக்களை கொடுக்க கூடியது திணை அரிசி என்றும் கூறுகிறார்.
கண் பார்வைக்கு நன்மை தரும் திணை அரிசி பற்றி மருத்துவர் சிவராமன் விளக்கி உள்ளார். திணை அரிசி கேரட்டை விட கண்ணுக்கு மிகவும் அதிக சத்துக்களை கொடுக்க கூடியது திணை அரிசி என்றும் கூறுகிறார்.
திணை அரிசி மற்றும் அதன் நன்மை பற்றி சித்த மருத்துவர் சிவராமன் விளக்கி கூறுகிறார். இதுகுறித்து அவர் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "திணை அரிசி குழந்தைகளின் கண் பார்வைக்கு நல்லது. திணை வகைகளில் மிகச் சிறப்பானது இந்த அரிசி. கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் இந்த அரிசியில் உள்ளது. இந்த அரிசி பசி ஆறுவது, சுவைக்கு மட்டுமல்ல கண்களுக்கும் நன்மை தருகிறது.
Advertisment
அரிசியை விட கம்பில் 8 மடங்கு இரும்பு சத்து உள்ளது. தினமும் ஒரே அரிசியை சாப்பிடாமல் வேறு வேறு அரிசியில் சாப்பிடுவது உடலுக்கு சத்து தரும். ஒரு நாள் திணை அரிசி பொங்கல், ஒரு நாள் கம்பு மோறு கூழ், வரகு அரிசி சாப்பிடலாம்.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் திணை அரிசியில் உள்ளதால் இது கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது.
நம் நாட்டில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அரிசி இனங்கள் உள்ளன. அன்றைய காலத்தில் ஒரு ஒரு பருவத்திற்கும் நோய்க்கும் அரிசி இனங்களை சாப்பிட்டு வந்தனர். தமிழகத்தில் மட்டும் 140 வகையான அரிசி இனங்கள் உள்ளது.
Advertisment
Advertisements
இப்படி மாறுபட்ட அரிசி, திணையை சாப்பிட்டு வரும் போது 30 வயதிற்கு மேல் சர்க்கரை, ரத்த கொதிப்பு, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும்" என்று கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.