scorecardresearch

காலையில் இந்த தண்ணீர் குடிங்க… சுகர் பிரச்னைக்கு ஈசி ரெமடி!

Diabetes Control Tips-Type 2 Diabetes patients should take this Morning Drink : உணவில் மாற்றங்கள் செய்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட சில முயற்சிகளின் மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள்கொண்டு வரலாம்.

Here are the drinks that you can include in your diet to manage blood sugar levels better

Patients with diabetes need to carefully manage their blood sugar level. It is important for people with diabetes to eat a healthy diet, including fruits and vegetables : இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினையாக மாறிவிட்டது நீரிழிவு நோய். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

ஆனால் தங்களது உடலில் நீரிழிவு நோய் இருப்பது தெரிந்த உடன் வாழ்நாள் முழுவதும் இதை கட்டுக்குள் வைக்க என்ன செய்வது என்தை யோசித்தே பலரும் பயந்து போய்விடுகின்றனர். ஆனால் உணவில் மாற்றங்கள் செய்வது மற்றும் உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட சில முயற்சிகளின் மூலம் நீரிழிவு நோயை கட்டுக்கொண்டு வரலாம்.

நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டுவர பல பானங்கள் இருந்தாலும் காலையில் எழுந்தவுடன்  சர்க்கரை நோயாளிகள் பார்லி தண்ணீர் குடிப்பது உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும். அதோடு மட்டுமல்லாமல் நாள் முழுவதும் உங்களை உற்சாகத்துடனும் செரிமான அமைப்பை சிறப்பாக வைத்திருக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும்.

பார்லி தண்ணீர் தரும் நன்மைகள் :

பார்லி தண்ணீரில் காணப்படும், நார்ச்சத்து, மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம், புதரம் வைட்டமின் பி6 உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உங்கள் உடலில் உள்ள நீரிழிவு நோயின் அறிகுறிகளை குறைக்க உதவும். இதனால் நீரிழிவு நோயின் அபாயம் வெகுவாக குறையும்.

இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உடலுக்கு அதிகளவில் நன்மை தருகிறது. இதில் கலோரிகள் குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்புவோரும் இதை பயன்படுத்தாலம்

​உமி நீக்கப்பட்டு அல்லது பதப்படுத்தப்பட்ட பார்லி பொதுவாக அனைத்து நாட்களிலும் கிடைககும் இதில் உமி நீக்கப்பட்ட பார்லி சுத்தமான தானியங்களில் ஒன்று. இதில் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இல்லாத அதன் வெளிப்புற பகுதியை நீக்கிவிட்டு பதக்கப்படுத்துவார்கள். இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் வெறும் வாயில் மென்று திண்றாலே அதிக நன்மைகள் தரக்கூடியது.

பார்லி தண்ணீர் தயாரிக்கும் முறை

பார்லி தானியங்களை நன்றாக கழுவி சுமார் 4 மணி நேரம் ஊறவைத்த பின்னர், தண்ணீரை வடிகடிட்டிவிட்டு, சுமார் 3 அல்லது 4 கப் அளவு தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும். பார்லி சா.ப்ட் ஆகும் வரை வேக வைத்து பின்னர் அந்த கலவையை ஆறவிட வேண்டும்.

ஆறிய பின்பு அந்த கலவையை வடிகட்டி தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் குடித்து வரவேண்டும். இதனுடன் எழுமிச்சைப்பழச்சாறு அல்லது தேன் கலந்து உட்கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Diabetes control tips type 2 diabetes patients should take this morning drink