சுகர் கண்ட்ரோல், இம்யூனிட்டி, ரத்த சுத்திகரிப்பு... நெல்லியை முறையா பயன்படுத்தி பாருங்க! | Indian Express Tamil

சுகர் கண்ட்ரோல், இம்யூனிட்டி, ரத்த சுத்திகரிப்பு… நெல்லியை முறையா பயன்படுத்தி பாருங்க!

நெல்லிக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன என நிபுணர்கள் கூறுகின்றனர். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும், ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யும், முடி வளர்ச்சிக்கு உதவும் எனப் பல நன்மைகள் உள்ளதாக கூறுகின்றனர். ஆயுர்வேத நிபுணர் ஷ்ரேயான்ஷ் ஜெயின் என்ன கூறுகிறார் என்பதை இங்கு பார்க்கலாம்.

சுகர் கண்ட்ரோல், இம்யூனிட்டி, ரத்த சுத்திகரிப்பு… நெல்லியை முறையா பயன்படுத்தி பாருங்க!

நெல்லிக்காய் பல கிராமங்களில் சாதாரணமாக கிடைக்கிறது. நெல்லிக்காயை பலர் விரும்பி சாப்பிடுவர். நெல்லிக்காய் ஜூஸ், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் சாக்லேட் எனப் பல வடிவங்களில் நெல்லிக்காயை நாம் அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் நெல்காயின் நன்மைகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை. நெல்லிக்காய் நம் உடலுக்கு அதிக நன்மை தருகிறது. சர்க்கரை நோயிற்கு உகந்ததாக உள்ளது. நெல்லிக்காயின் நன்மைகள் குறித்து ஆயுர்வேத நிபுணர் ஷ்ரேயான்ஷ் ஜெயின் விவரிக்கிறார்.

1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

நெல்லிக்காயில் பாலிபினால்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது செரிமானத்தை ஆதரிக்கவும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை வலுப்படுத்தவும் உதவுகிறது. உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராடுகிறது. நெல்லிக்காய் உடலில் உள்ள திசுக்களை புத்துணர்ச்சியூட்டுகிறது.

2. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது

நெல்லிக்காய் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது,
முக்கிய ஊட்டச்சத்துக்களை அனைத்து உறுப்புகளுக்கும் அனுப்ப உதவுகிறது. உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. ஆரோக்கியமான கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதய செயல்பாட்டை சீராக்குகிறது.

3. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கும்

நெல்லிக்காய் குறிப்பாக சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது. நெல்லிக்காய் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவை சீராக்கி, கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நெல்லிக்காய் சர்க்கரை நோய்க்கு பாராம்பரிய தீர்வாக பார்க்கப்படுகிறது.

4. செரிமானத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காயில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகளை சீராக்குகிறது. நெல்லிக்காய் உட்கொள்வதன் மூலம் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

5. முடி வளர்ச்சிக்கு உதவுகிறது

வைட்டமின் சி, அமினோ ஆசிட் என முடி வளர்ச்சிக்கு தேவையானவைகள் நெல்லிக்காயில் உள்ளன. நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வேர்காலை வலிமையாக்குகிறது, பொடுகுகைத் தடுக்கிறது. pH சமநிலையை உருவாக்கி முடி வளர்ச்சியை தூண்டுகிறது. நெல்லிக்காய் எண்ணெய்யை தலையில் தேய்த்து மசாஜ் செய்வது இளநரையைத் தடுக்க உதவுகிறது, என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Food news download Indian Express Tamil App.

Web Title: Did you know these 7 amazing benefits of amla