தொப்பை குறையணுமா? மதிய உணவாக பருப்புடன் சேர்த்து இந்தக் கீரை: டாக்டர் அமுதா டிப்ஸ்

உடல் எடையைக் குறைக்க பருப்புக் கீரை எவ்வாறு பயன்படுகிறது என மருத்துவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், கீரையில் இருக்கும் பல்வேறு சத்துகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Doctor Amudha

உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம் என பலரும் கூறுவார்கள். ஆனால், உடல் எடையை அவ்வளவு எளிதாக குறைத்து விட முடியாது. சீரான உணவு முறை மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றை தொடர்ச்சியாக பின்பற்றினால் மட்டுமே உடல் எடையைக் குறைக்க முடியும்.

Advertisment

அதிலும், உடற்பயிற்சி 30 சதவீதம் என்றால் உணவு முறை மாற்றத்தின் மூலமாக தான் மீதமுள்ள 70 சதவீதத்தை நாம் அடைய முடியும். அதன்படி, நாம் என்ன வகையான உணவுகளை எடுத்துக் கொள்கிறோம் என்பதை பொறுத்து தான், நமக்கு எந்த வகையான சத்துகள் கிடைக்கிறது என உறுதி செய்ய முடியும்.

அந்த வகையில் உடல் எடையைக் குறைக்க நினைப்பவரகள் அவசியம் பருப்புக் கீரை சாப்பிட வேண்டும் என மருத்துவர் அமுதா தெரிவித்துள்ளார்.  குறிப்பாக, பருப்புக் கீரை உடல் எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். 

100 கிராம் பருப்புக் கீரையை சமைத்து சாப்பிட்டால், அதில் இருந்து 50 கலோரிகள் மட்டுமே நம் உடலுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இதில் இருக்கும் அமினோ ஆசிட்ஸ், புரதம் ஆகியவை அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை குறைக்கிறது என மருத்துவர் அமுதா தெரிவித்துள்ளார். 

Advertisment
Advertisements

அதன்படி, இந்தக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து மதிய நேரத்தில் சாதத்திற்கு பதிலாக சாப்பிடலாம் என மருத்துவர் அமுதா பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் சோர்வின்றி உடல் எடையை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அதிக உடல் எடையால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது மதிய உணவுக்கு பதிலாக பருப்புக் கீரை சாப்பிட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - Avizhtham Herbals Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Spinach and its health benefits What happens if you consume spinach everyday?

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: