பல பெண்களுக்கு உடல் எடை சரியாக இருந்தாலும், வயிறு மட்டும் பெரிதாக இருப்பது அல்லது சிசேரியனுக்குப் பிறகு வயிறு தளர்ச்சியடைவது போன்ற கவலைகள் இருக்கும். அதை எப்படி சரிசெய்யலாம் என்று டாக்டர் தீபா அருளாளன் சில எளிய குறிப்புகளை பற்றி மிஸ்டர் லேடீஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
தொப்பையை குறைக்க வெந்தயம் உதவுவதாகவும் அதை எப்படி பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறார்.
முளைகட்டிய வெந்தயம்:
தயாரிப்பு முறை: வெந்தயத்தை ஊறவைத்து முளைகட்டி, வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும். முளைகட்ட முடியவில்லை என்றால், நன்கு ஊறவைத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
பயன்பாடு: தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடியைச் சேர்த்து, இரண்டு மூன்று நிமிடங்கள் கழித்து கொழகொழப்புடன் குடிக்கவும்.
பலன்கள்: வெந்தயத்தில் உள்ள 4-ஹைட்ராக்ஸி ஐசோலூசைன் (4-hydroxyisoleucine) மற்றும் கேலக்டமைன் (galactomannan) பசியைக் கட்டுப்படுத்தி, குறைவான உணவை உட்கொள்ள உதவும். இது கார்போஹைட்ரேட்டுகளைக் குறைத்து, உடல் எடையைக் குறைப்பதில் உதவுகிறது.
இந்த குறிப்புகள் அனைத்தும் 21 நாட்கள் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் சிறந்த பலனைத் தரும். தொப்பை குறைந்த பிறகு, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று மட்டும் இதை எடுத்துக்கொண்டு உடல் எடையை பராமரிக்கலாம். தினமும் காலை மற்றும் இரவு 15 நிமிடங்கள் brisk walking (வேகமாக நடப்பது) செய்வதும் தொப்பையைக் குறைத்து பராமரிக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.