பால் சாப்பிட்டே ஆகணுமா? அதைவிட பெஸ்ட் கால்சியம் உணவுகள் இவை: டாக்டர் மைதிலி
பால் பொருட்களை விட கால்சியம் சத்து நிறைந்த உணவு பொருட்களின் பட்டியலை மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இவை நம் எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி செய்கின்றன.
பால் பொருட்களை விட கால்சியம் சத்து நிறைந்த உணவு பொருட்களின் பட்டியலை மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இவை நம் எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி செய்கின்றன.
பால் மற்றும் அது சார்ந்த பொருட்களில் தான் அதிகமான கால்சியம் இருப்பதாக பலர் கருதுகின்றனர். அதற்கு பதிலாக இன்னும் சில உணவுகளில் நிறைய கால்சியம் சத்து இருக்கிறது. அதன் பட்டியலை மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
Advertisment
ஒரு கப் அளவிற்கு டோஃபு எடுத்துக் கொண்டால் அதில் இருந்து 506 மில்லி கிராம் கால்சியம் நம் உடலுக்கு கிடைக்கிறது. 100 மில்லி லிட்டர் பாலில் 125 மில்லி கிராம் கால்சியம் தான் இருக்கிறது என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரு நாளைக்கு தேவையான கால்சியம் ஊட்டச்சத்தில் டோஃபுவின் மூலமாக ஏறத்தாழ 40 சதவீத கால்சியம் சத்து கிடைக்கிறது.
இதேபோல், கறுப்பு நிற பேரிச்சம்பழத்தில் கால்சியம் சத்து நிறைய இருக்கிறது. அதன்படி, நாள்தோறும் 4 கறுப்பு நிற பேரிச்சம்பழம் சாப்பிட்டால் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்க முடியும் என மருத்துவர் மைதிலி கூறுகிறார். குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு இது பயன்படுகிறது.
மேலும், 50 கிராம் ராகியில் 175 மில்லி கிராம் கால்சியம் ஊட்டச்சத்து இருப்பதாக மருத்துவர் மைதிலி கூறியுள்ளார். இவ்வாறு நம் உணவில் ராகி இருப்பதை உறுதி செய்தன் மூலம் நமக்கு தேவையான கால்சியத்தை எளிதாக பெற முடியும் என்று கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
இரண்டு டீஸ்பூன் சியா விதைகளில் 179 மில்லி கிராம் கால்சியம் கிடைக்கிறது. இவற்றுடன் காய்ந்த அத்திப்பழங்களை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 100 கிராம் காய்ந்த அத்திப்பழத்தில் 162 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.
சிலருக்கு பால் பொருட்களை எடுத்துக் கொள்வதில் ஒவ்வாமை இருக்கும் காரணத்தால் அவர்களுக்கு கால்சியம் சத்து பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு மாற்றாக கால்சியம் சத்துகள் நிறைந்த பல்வேறு உணவு பொருட்களை சாப்பிடலாம். இதன் மூலம் எலும்பு மற்றும் பற்களை உறுதியாக பராமரிக்க முடியும்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.