உடல் உஷ்ணத்தை சீராக்கும்; பி.பி-யை குறைக்கும்: இந்தக் கீரை கிடைத்தால் விடாதீங்க!
புளிச்ச கீரையை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது எனக் கூறப்படுகிறது. அவற்றை மருத்துவர் மைதிலி பட்டியலிட்டு தெரிவித்துள்ளார்.
புளிச்ச கீரையை நம் அன்றாட உணவில் வாரத்திற்கு ஒரு முறையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் மைதிலி பரிந்துரைத்துள்ளார். இதன் மூலம் உடலில் உஷ்ணம் சீராக பராமரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இந்தக் கீரையை வேகவைத்து சாப்பிடலாம்.
Advertisment
நம் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி, மொத்தமாக தூய்மைப்படுத்தும் தன்மை புளிச்ச கீரைக்கு இருக்கிறது. சருமம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை புளிச்ச கீரை தடுக்கிறது. மேலும், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைவாக பராமரிப்பதன் முக்கிய பங்கு புளிச்ச கீரைக்கு இருக்கிறது.
இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தால் இருதயம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகாது. அதன்படி, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க புளிச்ச கீரை உதவுகிறது. இந்தக் கீரை செரிமான திறனை அதிகப்படுத்தி, மலச்சிக்கலை தடுக்கிறது. புளிச்ச கீரையை வாரத்திற்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு குறையும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
இதில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட்ஸ், உடலில் கேன்சர் செல் வளர்ச்சி ஏற்படாமல் தடுக்கும். 100 கிராம் புளிச்ச கீரையை சாப்பிட்டாலும், அதில் இருந்து 24 கலோரி அளவில் தான் நம் உடலுக்கு செல்கிறது. அதனடிப்படையில், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக புளிச்ச கீரையை சாப்பிடலாம். மேலும், இதில் இருக்கும் நார்ச்சத்து பசி உணர்வை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
Advertisment
Advertisement
முடி உதிர்வு பிரச்சனையையும் புளிச்ச கீரை குறைக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படக் கூடிய வயிற்று வலி, இடுப்பு வலி ஆகியவற்றை புளிச்ச கீரை குறைக்கிறது. இது இயற்கையான வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது. இவ்வளவு நன்மைகள் புளிச்ச கீரையில் இருக்கிறது என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.