உப்பு போடாமல் இந்தக் கீரை பொரியல்; கிட்னியை பாதுகாக்க பெஸ்ட்: டாக்டர் நந்தகோபாலன்
மூக்கிரட்டை கீரையை சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் நந்தகோபாலன் தெரிவித்துள்ளார். மேலும், இதில் இருந்து கிடைக்கும் நன்மைகள் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பார்ப்பதற்கு சாதாரணமாக தோன்றினாலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் மற்றும் சத்துகள் நிறைந்ததாக கீரை வகைகள் இருக்கின்றன. ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. இவை அனைத்தும் பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகிறது. அந்த வகையில் மூக்கிரட்டை கீரையின் நன்மைகள் குறித்து மருத்துவர் நந்தகோபாலன் தெரிவித்துள்ளார்.
Advertisment
சிறுநீரக கோளாறு இருப்பவர்கள் மூக்கிரட்டை கீரையை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் நந்தகோபாலன் அறிவுறுத்துகிறார். அதன்படி, ஒருநாள் விட்டு ஒரு நாள் இந்தக் கீரைய சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, ஒரு கப் மூக்கிரட்டை கீரையை உப்பு சேர்க்காமல் பொரியலாக சமைத்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தின் செல்கள் அனைத்தும் புதுப்பிக்கப்படும் என மருத்துவர் நந்தகோபாலன் தெரிவித்துள்ளார். உடலை உறுதிப்படுத்தும் தன்மை மூக்கிரட்டை கீரையில் இருக்கிறது. இவை மலச்சிக்கல் பிரச்சனையையும் குறைக்கிறது.
இரத்தத்தை சுத்திகரிப்பதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இதேபோல், சைனஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது மருந்தாக அமைகிறது. இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கும் அன்டி ஹைப்பர் க்ளைசெமிக் தன்மை மூக்கிரட்டை கீரையில் இருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு அடிப்படை பிரச்சனையாக இருக்கும் கால் எரிச்சல், குத்தல் போன்ற உபாதைகளை தீர்ப்பதற்கு இந்தக் கீரை உதவுகிறது.
Advertisment
Advertisements
எனவே, சரியான முறையில் மூக்கிரட்டை கீரை சமைத்து சாப்பிடும் போது நம் ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.