45 வயதை தாண்டிய பெண்களுக்கு எலும்பு தேய்வு, மூட்டு வலி... இந்தக் கீரை தான் நம்பர் 1 தீர்வு: டாக்டர் நித்யா
கால்சியம் குறைபாடு கொண்டவர்கள் பின்பற்றக் கூடிய உணவு முறை குறித்து மருத்துவர் நித்யா பரிந்துரைத்துள்ளார். குறிப்பாக, கீரையில் இருந்து கிடைக்கும் சத்துகள் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
உடலில் எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், பற்கள் வலிமையாக இருப்பதற்கும், தசைகள் சீராக இயங்குவதற்கும் கால்சியம் சத்தும் அவசியம் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இவை தவிர கல்லீரல் மற்றும் இருதயம் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் தேவைப்படுகிறது.
Advertisment
அந்த வகையில் உடலில் கால்சியம் குறைபாடு இருந்தால் சில அறிகுறிகள் இருக்கும். மெனோபாஸ் நேரங்களில் பெண்களுக்கு எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும். சிறிய அடிபட்டாலே பற்கள் மற்றும் எலும்புகள் உடைந்து விடும் நிலை ஏற்படும். அதிகமாக மூச்சு வாங்குதல், சருமம் வறட்சியாவதும் இதற்கான அறிகுறிகள் தான் என மருத்துவர் நித்யா கூறுகிறார்.
இதனால் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும். எனினும், கால்சியம் சத்தை உடல் எடுத்துக் கொள்ள வைட்டமின் டி3 அவசியம் ஆகும். இதனை சூரிய ஒளியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். தினமும் ஒரு கீரை வகையை எடுத்துக் கொள்ளும் போது கால்சியம் சத்து நமக்கு எளிதாக கிடைத்து விடும். குறிப்பாக, முருங்கைக் கீரை நம் உணவில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
எனவே, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது முருங்கைக் கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். இல்லையென்றால் முருங்கைக் கீரை பொடியை சூப்பாக அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம். கால்சியம் குறைபாடு பெரும்பாலும் 45 வயதைக் கடந்த பெண்களுக்கு வருகிறது. அதனால், பெண்கள் எல்லோரும் அவசியம் முருங்கைக் கீரை சாப்பிட வேண்டும் என பரிந்துரைக்கப்படுகிறது.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.