இன்றைய வேகமான உலகில் பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை தூக்கமின்மை. இது மன அழுத்தம், உடல்நலக் கோளாறுகள் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. டாக்டர் நித்யா ஆழ்ந்த மற்றும் தரமான உறக்கத்தைப் பெறுவதற்கான சில எளிய மற்றும் இயற்கையான வழிமுறைகளை பற்றி டாக்டர் ப்ள்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
Advertisment
தூக்கமின்மைக்கான காரணங்கள்
மொபைல் பயன்பாடு: படுக்கைக்கு முன் நீண்ட நேரம் மொபைல் பயன்படுத்துவது தூக்கத்தைப் பாதிக்க முக்கிய காரணம். அரை மணி நேரம் மொபைல் பார்த்தால், தூங்க ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும்.
அதிக சிந்தனை (Overthinking): பகல் நேர வேலை மற்றும் பிற சிந்தனைகள் இரவில் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருப்பது தூக்கத்தைத் தடுக்கிறது. குறிப்பாக பெண்கள் தங்கள் தினசரி கஷ்டங்களை நினைத்து உறக்கமின்றி தவிப்பதாகக் கூறுகிறார்கள்.
Advertisment
Advertisements
சர்க்கரை நோய்: சர்க்கரை அளவுகள் அதிகமாக இருக்கும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருப்பதால், தூக்கம் பாதிக்கப்படுகிறது.
உடல் வலி: உடல் வலி அதிகமாக உள்ளவர்களுக்கும் தூக்கமின்மை பிரச்சனை சாதாரணமாகக் காணப்படுகிறது.
ஆழ்ந்த உறக்கத்திற்கான இயற்கையான உணவு முறைகள்
அசைவ உணவுகளைத் தவிர்க்கவும்: இரவு நேரத்தில் அசைவ உணவுகளை முழுவதுமாகத் தவிர்க்க வேண்டும்.
பழங்களைத் தவிர்க்கவும் (சர்க்கரை நோயாளிகள்): சர்க்கரை நோயாளிகள் இரவு நேரத்தில் வெறும் பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதை பகல் நேரத்தில் அல்லது காலையில் சாப்பிடலாம்.
சரியான நேரத்தில் இரவு உணவு: இரவு 10 அல்லது 11 மணிக்கு மேல் உணவு உண்பதைத் தவிர்க்கவும். சரியான நேரத்தில் இரவு உணவை முடிப்பது ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும்.
தூங்கும் முன் பால்: இரவு தூங்குவதற்கு முன், சிறிது பால், நாட்டுச்சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து குடிப்பது தரமான உறக்கத்திற்கு வழிவகுக்கும்.
தூங்குவதற்கு இயற்கையான உணவுகள்:
சதாவரி சூரணம் மற்றும் அஸ்வகந்தா சூரணம்: இவை இரண்டும் இரவு நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக அஸ்வகந்தா சூரணம், உடல் வலுவை அதிகரித்து நல்ல உறக்கத்தைத் தூண்டுகிறது. இந்த மருந்துகள் உடனடியாக தூக்கத்தை ஏற்படுத்தாமல், படிப்படியாக தூக்கத்தை மேம்படுத்தும்.
கசகசா லேகியம்: சர்க்கரை நோயாளிகள் தவிர மற்றவர்கள், இரவு நேரத்தில் 5 கிராம் கசகசா லேகியத்தை பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
ஜாதிக்காய் தைலம்: ஜாதிக்காய் தூள் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால், ஜாதிக்காய் தைலத்தை பாலில் ஐந்து துளிகள் சேர்த்து இரவு நேரத்தில் குடிக்கலாம். இது உடலில் உள்ள கழிவுகளை நீக்கி ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.