108 டூ 60 கிலோ... கடகடன்னு வெயிட் குறைத்த டாக்டர் பூர்ணிமா; அவரே சொன்ன டயட் டிப்ஸ்!
டாக்டர் பூர்ணிமா தனது எடை குறைப்பு பயணத்திற்கு உதவிய டயட் பிளான்களை பற்றி கூறுகிறார். அவர் 108 கிலோவில் இருந்து 60 கிலோ எடையை எப்படி குறைத்தார் என்று கூறுகிறார்.
டாக்டர் பூர்ணிமா தனது எடை குறைப்பு பயணத்திற்கு உதவிய டயட் பிளான்களை பற்றி கூறுகிறார். அவர் 108 கிலோவில் இருந்து 60 கிலோ எடையை எப்படி குறைத்தார் என்று கூறுகிறார்.
டாக்டர் பூர்ணிமா 108 கிலோவில் இருந்து எப்படி 60 கிலோவாக தனது எடையை குறைத்தார் என்று ரெட்நூல் நங்கை யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். அவர் 2015 இல் தனது எடை குறைப்பு பயணத்தைத் தொடங்கியதாகவும் கூறினார்.
Advertisment
அவர் தனது எடை குறைப்பு பயணத்தை எப்படி குறைத்தார் என்று பார்ப்போம். அவர் தனது உடல் எடை குறைப்பு பயணத்தை தொடங்குவதற்கு முன் ஒரு தனிப்பட்ட பயிற்சியாளரின் உதவியை நாடியது சிறந்த முடிவுகளில் ஒன்றாகும் என்றார்.
டாக்டர் பூர்ணிமா பின்பற்றிய டயட் பிளானில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருந்ததாகவும் இருப்பினும், இது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுத்ததாகவும் கூறினார். அவர் சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் கூறினார்.
உணவு முறை:
Advertisment
Advertisements
காலையில், அவர் மூன்று முட்டைகள் மற்றும் முழு தானியங்களை சாப்பிடுவார். மதிய உணவிற்கு, அவர் புரதம் மற்றும் சிறிது சாதம் சாப்பிடுவார். மாலையில், அவர் தனது கிளினிக்கிற்குச் செல்வதற்கு முன் காபி மற்றும் ஒரு புரோட்டீன் ஷேக் குடிப்பார்.
இரவு உணவிற்கு, அவர் ஒரு புரோட்டீன் ஷேக் குடிப்பார். அவர் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் போன்ற சர்க்கரை உணவுகளைத் தவிர்த்த்தாகவும் கூறினார்.
அவர் வாரத்திற்கு ஐந்து நாட்கள் உடற்பயிற்சி செய்த்தாகவும் அவர் வலிமை பயிற்சி மற்றும் கார்டியோ இரண்டையும் செய்வதாகவும் கூறினார். அவர் ஒரு நாளைக்கு குறைந்தது 6,000 முதல் 8,000 படிகள் நடக்கிறார். நீரிழப்பைத் தவிர்க்க அவர் நிறைய தண்ணீர் குடித்தார்.
அவர் தனது கர்ப்ப காலத்தில் 20 கிலோ எடை அதிகரித்ததாகவும் குறிப்பிடுகிறார், ஆனால் பிரசவத்திற்குப் பிறகு ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் மீண்டும் உடல் எடையைக் குறைத்ததாகவும் கூறினார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.