இந்த ஒரு இலையால் தான் நம்ம தாத்தா - பாட்டி பலமா இருந்தாங்க; இவ்ளோ நன்மை இருக்கு: டாக்டர் பொற்கொடி
வெற்றிலை சாப்பிடுவதால் நம் உடலில் ஆரோக்கியம் மேம்படும் என்று மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார். மேலும், இவை நம் உடலை உறுதியாக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது.
உணவே மருந்து என்ற கூற்றின் படி வாழ்ந்து வந்ததால் தான் நம் முன்னோர்கள் பலரும் ஆரோக்கியமாக இருந்தனர். ஆனால், இன்றைய உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் பலரும் உடல் பாதிப்புகளுடன் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், காலப்போக்கில் நாம் சாப்பிடுவதற்கு மறந்து போன வெற்றிலையின் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
Advertisment
வெற்றிலையை தொடர்ச்சியாக சாப்பிட்டதன் காரணத்தினால் தான் நம் முன்னோர்கள் ஆரோக்கியமாகவும், உடல் பலத்துடனும் இருந்ததாக மருத்துவர் பொற்கொடி கூறுகிறார். குறிப்பாக, தினசரி ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ளும் போது நம் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலை பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி செரிமான மண்டலம் சீராக வேலை செய்ய வெற்றிலை உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்கிறது என்று மருத்துவர் பொற்கொடி குறிப்பிட்டுள்ளார். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக பராமரிப்பதற்கு வெற்றிலை பயன்படுவதாக அறியப்படுகிறது.
மேலும், அன்டி பேக்டீரியல், அன்டி ஃபங்கல் மற்றும் அன்டி மைரோபியல் ஆகிய தன்மைகளும் வெற்றிலையில் நிறைந்திருக்கிறது. இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை சரி செய்யக் கூடிய ஆற்றல் வெற்றிலையில் இருக்கிறது. நம் பற்களையும் வலிமையாக்க வெற்றிலை உதவுகிறது.
Advertisment
Advertisements
வெற்றிலையில் கால்சியம் சத்தும் காணப்படுகிறது. இதனால் மூட்டு வலி பிரச்சனைகளையும் வெற்றிலை குணப்படுத்த உதவுகிறது. இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த வெற்றிலையை தினசரி ஒன்று என்ற அளவில் சாப்பிட்டு வந்தால், நம் ஆரோக்கியம் மேம்படும் என்று மருத்துவர் பொற்கொடி அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.