உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும் ஒரு இயற்கையான ஜூஸ் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி டாக்டர் எஸ்ஜே ஹாட் டிவி யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். இந்த ஜூஸில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் அதன் தனித்துவமான மருத்துவ குணங்களால் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.
Advertisment
தேவையான பொருட்கள்:
மஞ்சள்: சுத்தமான மஞ்சள் பயன்படுத்தவும். புதிய மஞ்சள் அல்லது வேகவைத்த மஞ்சள் சிறந்தது. நெல்லிக்காய் வெண் பூசணி: இது உடல் எடை குறைப்புக்கு முக்கியமானது. தேன் அல்லது பழுப்பு சர்க்கரை சேர்க்கலாம்.
செய்முறை
Advertisment
Advertisements
முதலில், 200 கிராம் வெண் பூசணிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதனுடன் ஒரு நெல்லிக்காய் மற்றும் அரை அளவு மஞ்சள் சேர்க்கவும். இந்த கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அரைத்த ஜூஸை வடிகட்டி, தேவைப்பட்டால் சிறிதளவு தேன் கலந்து பருகலாம்.
வெண் பூசணி உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல், வயிற்றுக்கும் மிகவும் நல்லது. இது உடலில் உள்ள பித்தத்தைக் குறைக்கவும், நீண்ட நேரம் பசியுணர்வு இல்லாமல் இருக்கவும் உதவுகிறது. மஞ்சள் ஒரு சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
இந்த ஜூஸை சிறந்த பலன் பெற காலை அல்லது மாலை வெறும் வயிற்றில் குடிக்கலாம். தொடர்ந்து 45 முதல் 90 நாட்கள் வரை இந்த ஜூஸை பருகி வர நல்ல மாற்றத்தை உணர முடியும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.