சாப்பிடுவது பிடிக்கும் ஆனால் உடல் எடையை நினைத்து கவலையாக இருக்கிறது என்று கூறுவார்கள். அதே போல உடல் எடையை குறைக்க வேண்டும் ஆனால் என் சாப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்றும் கூறுவார்கள்.
Advertisment
அதற்கு தகுந்தார் போல உணவு பழக்கம் மூலமாகவே உடல் எடையை குறைக்கலாம் என்று டாக்டர் ஷர்மிகா டெய்சி ஹாஸ்பிடல் யூடியூப் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
அதன்படி ”ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நாம் சாப்பிடும் உணவில் மாவுச்சத்தை எடுத்துக் கொள்கிறோம். அதைக் குறைத்துக் கொண்டாலே போதும் என்கிறார்.
அதற்கு ஏதாவது ஒரு வேலை நமக்கு பிடித்த மாதிரி மாவுச்சத்து உணவை எடுத்துக்கொண்டு மற்ற இரு வேலைகளில் வேறு மாதிரியான உணவு முறைகளை பின்பற்றலாம். பழங்கள், காய்கறிகள், பயிர் வகைகள், முட்டை போன்றவற்றை மற்ற இரு வேளைகளில் சாப்பிடலாம். அதிகம் நார்ச்சத்துக் கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
Advertisment
Advertisements
அப்படியாக ஏதாவது ஒரு வேளை மட்டும் மாவு சத்து எடுத்துக் கொண்டு மற்ற இரண்டு வேளைகளில் இது மாதிரியான நார்ச்சத்து மிக்க உணவுகளையும் மற்ற சத்துக்கள் கொண்ட உணவுகளையும் எடுத்துக் கொண்டாலே போதும் மூன்று மாதங்களில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம்” என்கிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.