பிரண்டையில் அதிக அளவு கால்சியம் உள்ளது, இது எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது. சித்த மருத்துவத்தில் இதற்கு வஜ்ரவல்லி என்று பெயர். வஜ்ரம் என்றால் உறுதி, வல்லி என்றால் கொடி. உறுதிப்படுத்தக்கூடிய கொடி என்பதால் இப்பெயர் பெற்றது. இதனை வைத்து எப்படி துவையல் செய்வது என்று குக்வித் சுகு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
தேவையான பொருட்கள்:
பிரண்டை - 1 கட்டு உளுத்தம்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் பூண்டு - 10 பல் இஞ்சி - 1 துண்டு காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 தேங்காய் - 1 துண்டு புளி - சிறிதளவு நல்லெண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு பெருங்காயத்தூள் - கால் டேபிள் ஸ்பூன்
செய்முறை:
Advertisment
Advertisements
பிரண்டையில் உள்ள மேல் தோலை நீக்கி விட்டு நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்துக் எண்ணெய் சூடானதும் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் பூண்டு, இஞ்சி, புளி, பெருங்காயத்தூள், தேங்காய் என ஒவ்வொன்றாக வறுத்து ஆற வைக்கவும். அடுத்து அதில் பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள பிரண்டையை சேர்த்து வதக்கவும். பிரண்டையை நன்கு வதக்க வேண்டும்.
பிரண்டையை வதக்கும் போது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். சூடு ஆறிய பின் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். சுவையான சத்தான பிரண்டை துவையல் தயார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.