50 வயதில் பெண்களுக்கு இந்த பிரச்சனை; உங்க எலும்பை வலுவாக்க ஸ்பெஷல் கீரை இதுதான்: மருத்துவர் சிவராமன்
எலும்புகளின் ஆரோக்கியம் குறித்து அறிவுறுத்தியுள்ள மருத்துவர் சிவராமன், அவற்றை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து பரிந்துரைத்துள்ளார்.
நம் உடலை சீராக கட்டமைத்து காண்பிப்பது எலும்புகள் தான். நம் பிறப்பு முதல் இறப்பு வரை மிகவும் உறுதுணையாக இருக்கக் கூடிய அங்கமாக எலும்புகள் விளங்குகிறது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இத்தகைய எலும்புகளை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கான வழிமுறைகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.
Advertisment
கால்சியம் சத்து பற்றாக்குறையாக இருந்தால் எலும்பின் வலு குறைந்து விடும். எனவே, கால்சியம் சத்துகள் நிறைந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏறத்தாழ 49, 50 வயதையொட்டி இந்திய பெண்களுக்கு மாதவிடாய் முடிவடையும். அந்த நேரத்தில் பெண்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும்.
ஒரு கிளாஸ் மோரில் 280 மில்லி கிராம் கால்சியம் இருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். நம் உணவில் கேழ்வரகு இருப்பதை அவசியம் உறுதி செய்ய வேண்டும். கேழ்வரகிலும் கால்சியம் நிறைந்திருக்கிறது. இவை அனைத்திற்கும் மேலாக, பிரண்டை கீரையில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பிரண்டை கீரையை துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதேபோல், அசைவ உணவை பொறுத்தவரை மீன் மற்றும் கோழி இறைச்சிகளில் இருந்து கால்சியம் சத்தை பெறலாம். கோழியின் ஈரல், ஆட்டின் மண்ணீரல் ஆகியவை எலும்புகளை வலிமையாக்கும். இவை மூலம் உணவு வாயிலாக எலும்புகளை வலுப்படுத்த முடியும்.
Advertisment
Advertisement
இவை மட்டுமின்றி உடற்பயிற்சிகள் மூலமாகவும் எலும்புகளை வலுப்படுத்த வேண்டும். நடைபயிற்சி, ஓட்டம் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். இப்படி நம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றத்தின் மூலம் எலும்புகளை வலுவாக்க முடியும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
நன்றி - Tamil Speech Box Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.