பெரும்பாலான கீரைகள் குறைந்த காலத்திலேயே அதிகப்படியான பயன்களை கொடுக்கக் கூடியது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, செலினியம், மேங்னீஸ், இரும்புச் சத்து போன்ற நுண்ணிய கனிமங்கள் கீரை வகைகளில் நிறைந்து காணப்படுகின்றன.
Advertisment
நோய் எதிர்ப்பு ஆற்றலை இயல்பிலேயே கொடுக்கக் கூடிய தன்மை கீரைகளுக்கு இருக்கிறது. முருங்கைக் கீரையில் இருக்கும் பயன்கள், வேறு எந்தக் கீரையிலும் இல்லை என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். முருங்கைக் கீரையில் அதிகப்படியான இரும்புச் சத்து இருக்கிறது.
கண் பார்வையை கூர்மையாக்குவது, நரம்பு மண்டலத்தை பலப்படுத்துவது போன்ற ஆற்றல் முருங்கைக் கீரையில் உள்ளது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதேபோல், பசலைக் கீரை, பாலக்கீரை, பொன்னாங்கன்னி போன்றவையும் நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கரிசலாங்கண்ணி கீரையில் கல்லீரலை பலப்படுத்தும் மருத்துவ குணங்கள் இருக்கிறது. சிறுகீரை குழந்தைகளின் செரிமான மண்டலத்தை வலுப்படுத்துகிறது. சர்க்கரை நோய், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் ஆகியவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமானால் ஃபைபர் சத்துகளை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
Advertisment
Advertisements
அந்த ஃபைபர் சத்துகள் அனைத்தும் கீரையில் அதிகமாக இருக்கிறது என சிவராமன் கூறியுள்ளார். எனவே, நம் அன்றாட உணவில் கீரை இடம்பெறுவதை உறுதி செய்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.