10 கிலோ உடல் எடை குறையணுமா? இந்த உணவை முதல்ல தவிருங்க: மருத்துவர் சிவராமன்
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம் அதற்கு என்ன மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
ஆரோக்கியமான முறையில் உடல் எடையை எப்படி குறைக்கலாம் அதற்கு என்ன மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் சிவராமன் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
உடல் எடை அதிகரிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் ஒரு பெரும் சவாலாக உள்ளது. உடல் எடையைக் குறைக்க மாத்திரைகள் அல்லது உடனடித் தீர்வுகள் தேடுபவர்கள் ஏராளம். ஆனால், மருந்துகள் மூலம் மட்டும் உடல் எடையைக் குறைப்பது சாத்தியமில்லை என்று சித்த மருத்துவர் டாக்டர் சிவராமன் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். உடல் எடையைக் குறைப்பதற்கான சரியான அணுகுமுறை, உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் தேவைப்பட்டால் சில மூலிகை ஆதரவு குறித்து அவர் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.
Advertisment
உடல் எடையைக் குறைக்க தவிர்க்க வேண்டியவை:
பால் மற்றும் பால் பொருட்கள்: பால், தயிர், வெண்ணெய், நெய், பன்னீர், சீஸ் போன்ற பால் பொருட்களை முழுமையாகத் தவிர்க்க வேண்டும்.
இனிப்புகள்: எந்தவிதமான இனிப்புகளையும், குறிப்பாக தயார் நிலையில் உள்ள இனிப்புகள் மற்றும் வெள்ளை சர்க்கரையை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை ஒரு விஷம் போன்றது என்று அவர் எச்சரிக்கிறார்.
Advertisment
Advertisements
கிழங்கு வகைகள்: சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தக்கூடிய கிழங்கு வகைகளைத் தவிர்க்கலாம்.
பட்டை தீட்டப்பட்ட தானியங்கள்: பச்சரிசி, மைதா மாவு போன்ற வெள்ளையான தானிய வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
பிராய்லர் சிக்கன்: உடல் எடையை வேகமாக அதிகரிக்கக்கூடிய பிராய்லர் சிக்கன் போன்ற அசைவ உணவுகளைக் கொஞ்ச காலத்திற்குத் தவிர்ப்பது நல்லது.
குளிர்ச்சியான உணவுகள்: குளிர்ச்சியான உணவுகள் மற்றும் ஐஸ் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இவை உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
ஒரு நாளைக்கு சுமார் 2200 கலோரிகள் தேவைப்படும் நிலையில், 1200-1700 கலோரிகள் மட்டுமே எடுத்துக்கொண்டால், மீதித் தேவையான ஆற்றலை உடல் சேமிப்பில் உள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும்.
வாரத்திற்கு ஒரு நாள் முழுமையாக பழ உணவை எடுத்துக்கொள்ளலாம். மற்றொரு நாள் முழுமையாக நீர் உணவை (பழச்சாறு, நீர்) எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலையிலும் மாலையிலும் 45 நிமிடங்கள் கைகளை வீசி, சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடக்கும் அளவு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
கபாலபாதி பிராணாயாமம் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சூரிய நமஸ்காரப் பயிற்சியும் உடல் எடையைக் குறைக்க உதவும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்ற உறுதியான மனதிடம் மிக முக்கியம். 'நான் குறைத்துக்கொள்வேன்' என்ற வெறி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் மனச்சோர்வு ஏற்பட்டாலும், தொடர்ந்து பயிற்சி செய்தால் உடல் எடை வேகமாக குறையத் தொடங்கும்.
இந்த முயற்சிகளின் மூலம் 90 கிலோ எடை உள்ளவர் இரண்டு முதல் மூன்று மாதங்களில் 9 கிலோ வரை வேகமாக எடையைக் குறைக்க முடியும். மேலும், உடல் எடையைக் குறைப்பது சர்க்கரை, இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல நோய்கள் வராமல் தடுக்க உதவும் ஒரு பாதுகாப்பு அரண் போன்றது. எனவே, உங்கள் உடல் எடையைப் பார்த்து, அதற்கான முயற்சியை இன்றே தொடங்குங்கள் என்று டாக்டர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.