வாரத்தில் ஒரு நாள் பழங்கள் மட்டும்... ஒரே மாதத்தில் 3 கிலோ எடை குறைய வழி இருக்கு: மருத்துவர் சிவராமன்
ஒரே மாதத்தில் 3 கிலோ வரை எடை குறைய டாக்டர் சிவராமன் கூறும் டிப்ஸ் பற்றி பார்ப்போம். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிட கூடாது என்றும் அவர் கூறுகிறார்.
ஒரே மாதத்தில் 3 கிலோ வரை எடை குறைய டாக்டர் சிவராமன் கூறும் டிப்ஸ் பற்றி பார்ப்போம். அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிட கூடாது என்றும் அவர் கூறுகிறார்.
தற்போது உடல் எடை பாதிப்பால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றனர். நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளின் மூலம் ஒரு மாதத்திற்குள் சுமார் 3 கிலோ வரை எடை குறைப்பதற்கான வழியை மருத்துவர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் பரிந்துரைத்துள்ளார்.
Advertisment
காலையில் எழுந்ததும் வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டுமென சிவராமன் தெரிவித்துள்ளார். இதையடுத்து காலை உணவாக இட்லி, தினையரிசி பொங்கல், அதிகளவில் பழத்துண்டுகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். குறிப்பாக, காலை நேரத்தில் ஆவியில் வெந்த உணவு மற்றும் பழத்துண்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுமார் 11 மணியளவில் கிரீன் டீ பருகலாம். மதியம் சாப்பிடுவதற்கு முன்பாக பொடியாக செய்து வைத்த வெந்தயத்தை அரை ஸ்பூன் சாப்பிட வேண்டும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து பசியைக் குறைக்கும். மதிய உணவாக நிறைய காய்கறிகள், சிறிய அளவு சாதம், அதிக எண்ணெய் இல்லாத குழம்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், ரசம் மற்றும் மோர் இரண்டையும் குடிக்கலாம்.
மாலை நேரத்தில் இளநீர், பழச்சாறு அல்லது கிரீன் டீ பருகலாம், அதன்பின்னர், இரவு நேரத்தில் கேழ்வரகு உப்புமா, எண்ணெய் இல்லாத சப்பாத்தி போன்றவற்றை சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
இவ்வாறு செய்வதன் மூலம் மாதத்திற்கு சுமார் இரண்டரை கிலோ முதல் மூன்று கிலோவ வரை உடல் எடை குறையும் என சிவராமன் கூறியுள்ளார். இந்த உணவு பழக்கம் ஒரு வாரம் பழகிய பின்னர், வாரத்தில் ஒரு நாள் மட்டும் முழுமையாக பழங்கள் சாப்பிட வேண்டுமென தெரிவித்துள்ளார். இவற்றுடன் சரியான அளவு உடற்பயிற்சியும் செய்ய வேண்டுமென மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
நிறைய எண்ணெய், கொழுப்பு நிறைந்த உணவுகள் எடுத்து கொள்ள கூடாது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.