/indian-express-tamil/media/media_files/2025/06/20/thillai-2025-06-20-15-34-57.jpg)
நம் உடலுக்கு தேவையான சத்துக்களில் மிகவும் முக்கியமான சத்து ஒன்று கால்சியம். பாலில் தான் மிகவும் அதிகமாக கால்சியம் இருப்பதாக நினைக்குறோம். ஆனால் அதை விட அதிகம் கால்சியம் இருக்கும் கீரையை பற்றி டாக்டர் தில்லை வளவன் கூறுகிறார்.
எலும்புகள் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிக முக்கியம். எலும்பு நன்றாக இருக்க வேண்டும் என்றால், பால் நிறைய குடிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்த்து இருப்பார்கள். பாலில் அதிக கால்சியம் சத்து உள்ளது என்றும் சொல்வார்கள். ஆனால் பாலை விட அதிக சத்து முருங்கை கீரையில் உள்ளது.
விலை உயர்ந்த ஆப்பிள் பழங்களை வாங்குவதற்குத் தயங்காத நாம், தெருவில் விற்கப்படும் கீரைகளை வாங்கும்போது பேரம் பேசுவது ஏன் என்றும் உண்மையில், நாம் கீரைகளின் விலையில் பேரம் பேசவில்லை, நமது ஆரோக்கியத்தில்தான் பேரம் பேசுகிறோம் என்றும் டாக்டர் தில்லை வளவன் தமிழ் ஸ்பீச் பாக்ஸ் யூடியூப் பக்கத்தில் கூறி இருக்கிறார்.
பாலை விட முருங்கை கீரையில் 17 மடங்கு அதிகமாக கால்சியம் சத்துள்ளது. ஆகையால் தினமும் பால் அருந்த முடியாதவர்களுக்கு இது சிறந்த மாற்றாக இருக்கும். முருங்கை கீரையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ அதிகமாக உள்ளது. அதேப்போல் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது.
மருத்துவமனைகளில் சர்க்கரை வியாதி, இரத்த சோகை, இரத்த அழுத்தம், இதயப் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் ஃபிளவனாய்ட்ஸ் (Flavonoids) போன்ற சத்துக்களைக் கொண்ட மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர்.
இந்த மாத்திரைகளின் அட்டைகளில் "மருத்துவ நோக்கங்களுக்காக அல்ல, இது ஊட்டச்சத்து மதிப்பு கொண்டது" (Not for medicinal purposes, it's nutritional value) என்று குறிப்பிடப்பட்டிருக்கும். காரணம், இந்தச் சத்துக்கள் எளிமையாக கீரைகளில் கிடைக்கின்றன. ஆனால், ₹500 முதல் ₹600 வரை செலவழித்து மாத்திரைகளை வாங்கும் நாம், வெறும் ₹5-₹10 கொடுத்து கீரைகளை வாங்க யோசிக்கிறோம். இதுதான் இன்றைய சூழ்நிலை. கீரைகள் உண்மையில் சத்துக்கள் பொதிந்த ஒரு பெரிய வரப்பிரசாதம் என்கிறார்.
"முருங்கையை நட்டவன் வெறும் கையோடு நடப்பான்" என்ற பழமொழி, முதுமையில் ஊன்றுகோல் இல்லாமல் நாம் நடக்க வேண்டும் என்றால், முருங்கையை பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சொல்லப்பட்டது. இன்று கோடிக்கணக்கில் விற்கப்படும் கால்சியம் மாத்திரை மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளில் கிடைக்கும் சத்துக்களை, நமது வீட்டுத் தோட்டத்தில் கிடைக்கும் முருங்கை கீரையே முழுமையாக பூர்த்தி செய்யும் என்பது பலருக்குத் தெரியவில்லை.
கால்சியம்: பாலை விட 17 மடங்கு அதிக கால்சியம் முருங்கை கீரையில் உள்ளது. முட்டி வலி உள்ளவர்கள் மருத்துவமனைகளை நாடி, கால்சியம் மற்றும் வலி மாத்திரைகளை வாங்கிப் போடுவதை விடுத்து, முருங்கை கீரை சூப் அல்லது ரசம் வைத்து குடிக்க வேண்டும்.
கேழ்வரகுடன் முருங்கை: கேழ்வரகு பாலை விட 8 மடங்கு அதிக கால்சியம் கொண்டது. முருங்கையும் கேழ்வரகும் சேர்த்த அடை நமது பாரம்பரிய உணவு. இது பாலை விட 25 மடங்கு அதிக கால்சியம் கொண்டது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.