உடல் எடை அதிகரித்திருப்பவர்கள் விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை, ஏதாவது மாத்திரை உட்கொண்டு எடையை குறைக்கலாமா என எதிர்பார்க்கின்றனர். இதற்கு ஏற்றார் போல் பல நிறுவனங்களும் தங்கள் மருந்துகளை சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என விளம்பரம் செய்கின்றனர்.
Advertisment
ஆனால், உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம் மற்றும் சீரான உடற்பயிற்சிகளின் மூலமாக தான் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என டாக்டர் வேணி கூறுகிறார். சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை மட்டும் குறைத்து விட்டு உடலை குறைப்பதற்கான வழியை டாக்டர் வேணி நியூரோ டாக்டர் தமிழ் யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
டிப்ஸ் 1 : சர்க்கரை, கார்போஹட்ரேட் தவிர்க்கவும். காபி, டீ குடிக்க கூடாது, பால் சேர்க்காமல் பிளாக் டீ எடுக்கலாம்.
டிப்ஸ் 2: சுடுதண்ணீர் குடித்து உணவு சாப்பிடலாம்.
Advertisment
Advertisements
டிப்ஸ் 3: 11 மணிக்கு நிறைய காய்கறிகள் போட்ட கூட்டு, சாலட் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.
டிப்ஸ் 4: அரிசி உணவுகளை தவிர்க்க வேண்டும். மாலையில் சர்க்கரை மற்றும் பால் இல்லாமல் டீ, காபி குடிக்கலாம்.
டிப்ஸ் 5: முட்டை, பன்னீர் இரவு உணவில் சேர்க்கலாம். இதனால் மன அழுத்தம் குறையும்.
ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் வராது, கொழுப்பு படிந்த கல்லீரல் பிரச்சனையும் வராது. கிட்னி பிரச்சனையை சரிசெய்யும். இம்யூன் சிஸ்டம் சரியாகும்.
இணையத்தில் அதிகப்படியாக தேடப்படும் தகவல்களில் உடல் எடை குறைப்பு என்பது முதன்மையான இடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு நிறைய பேர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். ஏனெனில், இது ஆரோக்கிய குறைபாடாக தற்போதைய சூழலில் மாறி இருக்கிறது.
சாப்பிட்டு முடித்ததும் சுமார் 10 நிமிடங்களுக்கு குறுநடை போட வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். செரிமானம் சீராக இருந்தால், தேவையில்லாத கொழுப்புகள் தங்குவதற்கு வாய்ப்பு இருக்காது. எனவே, இந்த அனைத்து டிப்ஸ்களையும் பின்பற்றி உடல் எடையை குறைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.