இட்லி சிறந்த உணவு தான். ஆனால் 45 வயதுக்கு மேல் ஆனவர்கள் இட்லி, தோசையை வாரத்தில் ஒரு முறை சாப்பிடலாம். இவர்கள் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை உணவாக முளைகட்டிய பயிர், ஊறவைத்த துண்டல், கொண்டக்கடலை, முட்டை, பால் பன்னீர், கொஞ்சம் பாதாம் சாப்பிடலாம்.
காலை உணவை இப்படி சாப்பிட்டால் தான் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும். சர்க்கரை வராமலும் தடுக்க முடியும். தமிழகத்தில் 1 கோடி பேர் சர்க்கரை நோய் உள்ளவர்கள் என ஆய்வு சொல்கிறது. இதில் 10% பேர் தான் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். 90% பேர் அதை சரியாக கவனிக்காமல் உள்ளனர்.
கட்டுப்பாட்டில்லாத சர்க்கரையால் பிற பாதிப்புகள் மாரடைப்பு, புற்றுநோய், சிறுநீரக கோளாறு வர அதிக வாய்ப்பு உள்ளது. இங்கு தான் நாம் எச்சரிக்கையாகவும், நம் மரபை திரும்பி பார்க்க வேண்டிய நேரமாகவும் உள்ளது" என்று கூறினார்.
Healthy food can protect us from diabetes... | Dr.G.Sivaraman | Health Basket Health Tips
சர்க்கரை நோய் இருப்பவர்களோ அல்லது சர்க்கரை நோயின் ஆபத்து இருப்பவர்களோ இட்லி சாப்பிட கூடாது. சர்க்கரை நோய் உங்களுக்கு இருந்தால் நீங்கள் எந்த விதமான மருந்தும் எடுத்து கொள்ளலாம் அனால் அதை விட அதிகமான அக்கறையை உணவில் காட்டுங்கள் என்கிறார் டாக்டர் சிவராமன்.
சர்க்கரை நோய் உள்ளவராக இருந்தாலும், சர்க்கரை நோய் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தாலும் நேரடியாக க்ளுகோஸ் தரும் உணவுகளை காலையில் முதல் வேலையில் எடுத்து கொள்ள வேண்டாம்.
நம் உணவு எப்படி இருக்க வேண்டும் என்றால், காலையில் ஒரு கப் நிறைய கருப்பு கொண்டைக்கடலை சுண்டல், வேக வைத்த முட்டை, நிறைய காய்கறிகள் போட்டு சூப் எடுத்து கொள்ளலாம். நீங்கள் சைவமாக இருந்தல் முட்டைக்கு பதில் பன்னீர், வேர்க்கடலை அல்லது பாதம் பருப்பை எடுத்துக்கொள்ளலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.