நவீன யுகத்தில் நமது பாரம்பரிய இயற்கை உணவுகள் அதன் முக்கியத்துவம் பற்றிய புரிதல் அற்று இருப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற நோய்கள் கூட தீராத நோய்களாகின்றன. பதாம் பிசின் ஒரு காயகல்ப மருந்து உடல் சூடு, மற்றும் வயிற்று புண்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது.
எனவே பாதாம் பிசின் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான பலனை பற்றி ஸ்ரீ வர்மா யூடியூப் பக்கத்தில் மருத்துவர் கௌதமன் கூறியிருப்பதாவது,
இரவில் ஊறவைத்த பாதாம் பிசின் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படுதல் மற்றும், குழந்தையின்மையை போக்கி கருத்தரிக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்திடும். உடலில் ஏற்படும் அதீத சூட்டை தனித்து அசிடிட்டி பிரச்சனைகளை குணப்படுத்தி, தசைகளின் உறுதியையும், ஆண்மை,விறைப்புத்தன்மையையும் அதிகரித்திடும். எலும்புகளை பலப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்க செய்து தன்னம்பிக்கையை உருவாக்கிடும்.
பெண் குழந்தைகளுக்கு இது மிகவும் ஆரோக்கியம் தரக் கூடியது. இரவில் 1 தேக்கரண்டி பாதாம் பிசினை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலை எழுந்த உடன் அதை மென்று சாப்பிட வேண்டும்.
வெறும் வயிற்றில் சாப்பிட்டு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் மாற்றம் தெரியும். முகப் பொழிவு பெரும். தலைமுடி உதிர்தல் குறையும். தலைமுடி கருமையாக வளரும். உடல் சூடினால் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்க முடியும். குழந்தைகள் ஆரோக்கியம் இருப்பர். பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் சீராக வருவதற்கு இந்த பாதாம் பிசின் உதவும் என்றார்.
உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் குளிர வைத்திடும் பாதாம் பிசின் !! Dr.கௌதமன்
திருமணமான ஆண்கள், பெண்கள் தினமும் பாதாம் பிசின் சாப்பிட வேண்டும். பாதாம் பிசினில் அதிகப்படியான ஜிங்க் உள்ளதால் இது ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கும். இதனால் ஆண்களின் விந்தணுக்கள் குறைபாடு நீங்கி, அவர்களது ஆண்மை அதிகரிக்கும்.
பாதாம் பிசின் இயற்கையான குளிரூட்டி என்பதால் இது உடலின் வெப்பத்தை குறைக்கும். உடல் சூட்டினால் ஏற்படும் நீர் கடுப்பு வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். எனவே உடலில் இருக்கும் அதிகப்படியான சூட்டை தணிக்க பாதாம் பிசின் உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.