வெந்தயம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்குமா என்ற கேள்வி பலருக்கு உள்ளது. அவ்வாறு சாப்பிட வேண்டுமானால் எவ்வளவு வெந்தயம் எடுத்துக் கொள்ள வேண்டும்? யாரெல்லாம் வெந்தயம் சாப்பிடலாம் போன்ற பல கேள்விகளுக்கு மருத்துவர் சிவபிரகாஷ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
வெந்தயம் மற்றும் ஆப்பிள் சிடார் வினிகர் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடிவும் என சில ஆய்வு முடிவு கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார். வெந்தயத்தை சரியாக எடுத்துக் கொண்டால் 0.8 சதவீதம் வரை சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மருத்துவர் சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வெந்தயம் ஒரு நாளைக்கு எவ்வளவு கிராம் சாப்பிடவேண்டும் ?
வெந்தயம் செரிமானத்தை தாமதமாக்குவதற்கு உதவி செய்வதாக சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார். வயிற்றில் இருக்கும் உணவு குடலுக்கு செல்லும் வேகத்தை வெந்தயம் கட்டுப்படுத்துவதாகவும், இதனால் நீண்ட நேரம் உணவு வயிற்றில் இருப்பதால் சர்க்கரை சிறிது, சிறிதாக வெளியேறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாளுக்கு 6 கிராம் வரை வெந்தயத்தை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் சிவபிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, ஒரு வேளை உணவில் 2 கிராம் வரை வெந்தயம் எடுத்துக் கொள்ளலாமென அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.