உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டெ வருகிறது. சர்க்கரை நோய் இல்லாதவர்களும்கூட தங்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
Advertisment
பொதுவாக, சர்க்கரை நோய் உள்ளவர்களும் சரி, சர்க்கரை நோய் இல்லாதவர்களும் சரி, சாப்பிட்ட பிறகு, அவர்களின் ரத்தத்தின் சர்க்கரை அளவு கிடுகிடுவென அதிகரிப்பதாகக் கூறுகிறார்கள். அதனால், சாப்பிட்ட பிறகு இப்படி வேகமாக உயரும் சர்க்கரையைக் கட்டுப்படுத்த மிஸ்டர் லேடிஸ் யூடியூப் பக்கத்தில் டாக்டர் நித்யா சில வழிமுறைகளைக் கூறுகிறார்.
இரவு நேரத்தில் வெந்தயம் சாப்பிடுவதால் நமக்கு நிறைய பலன்கள் கிடைப்பதாக அவர் கூறுகிறார். வெந்தயத்தை வறுத்து பொடி செய்து அதனுடன் சிறிது சீரகப்பொடி சேர்த்து இரவு உணவு முடித்து தூங்கும் முன் சாப்பிட்டு வரலாம்.
இதனால் நீரிழிவு உள்ளவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். மேலும் மலச்சிக்கல் பிரச்சனையும் சீராகும் என்று மருத்துவர் கூறுகிறார்.
Advertisment
Advertisements
செய்முறை: வெந்தயத்தை எடுத்து சிறிது நேரம் மிதமான சூட்டில் வறுத்து ஆறவைத்து பொடி செய்து எடுத்து கொள்ளவும். தினமும் இரவு இதனுடன் சீரகப்பொடி சிறிது கலந்து சுடுதண்ணீரில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
இதனால் இரத்த ஓட்டம், செரிமானக்கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும் என மருத்துவர் கூறுகிறார்.
சீரகம் மற்றும் வெந்தயம் இரவில் சாப்பிடுவதால் இரத்த. சரியான முறையில் ஓடும், உடல் ஆரோக்கியத்துடனும் நல்ல சுறுசுறுப்பையும் கொடுக்கும். சீரகம் மற்றும் வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்துவதால், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் குறையும். இவை உங்கள் உடலை சீராக செயல்பட வைக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.