கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம்: ஊற வைத்து சாப்பிடணுமா? பொடி செய்து சாப்பிடணுமா?
கொலஸ்ட்ராலை குறைக்கும் முக்கிய உணவுப் பொருளாக வெந்தயம் இருக்கிறது. வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பிற இரசாயனங்களும் உள்ளன. இவை கசப்பான, வால்நட் போன்ற சுவை கொண்டது.
நவீன வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிக மன அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகியவை ஆபத்தான சுகாதார நிலையை ஏற்படுத்துகிறது. இந்த காரணிகள் இதய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. உங்கள் உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவைப்படுவது அவசியமானது. அவை நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படுகின்றன.
Advertisment
அதேபோல், உங்கள் உடலில் தேவையில்லாத கெட்ட கொழுப்புகளும் படியலாம். இது சில நேரங்களில் உங்களுக்கு உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் மாரடைப்பு மற்றும் இதய நோயையும் ஏற்படுத்தலாம். இதனைக் கட்டுப்படுத்த ஏராளமான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் கொண்ட உணவுகள் உதவுகிறது. தக்காளி, பீட்ரூட், கேரட், கீரை, வெந்தயம் மற்றும் பாகற்காய் போன்ற காய்கறி ஜூஸ்களை தினமும் காலையில் குடித்து வந்தால், உங்களின் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்கும்.
கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம்
அந்த வகையில், கொலஸ்ட்ராலை குறைக்கும் முக்கிய உணவுப் பொருளாக வெந்தயம் இருக்கிறது. வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பிற இரசாயனங்களும் உள்ளன. இவை கசப்பான, வால்நட் போன்ற சுவை கொண்டது. இது பெரும்பாலும் மசாலா கலவைகளிலலும், நம்முடைய அன்றாட சமையலிலும் பயன்படுத்தப்படுகிறது.
கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயத்தை நேரடியாக பொடி செய்து சாப்பிட வேண்டும் என சித்த மருத்துவர் சிவராமன் குறிப்பிடுகிறார். இது தொடர்பாக அவர் யூடியூப் வீடியோ ஒன்றில், 'பித்த உடம்பு அல்லது உடல் சூடு என்றால் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம். இரத்த கொழுப்பை குறைக்க வேண்டும் என்றால், அவற்றை பொடி செய்து நேரடியாக உட்க்கொள்ளலாம்." என்று கூறுகிறார்.
வெந்தய பொடியை தயிருடனும் சேர்த்து சாப்பிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.