உயர் இரத்த அழுத்தம் என்பது இதய நோயை வரத் தூண்டும் ஒரு ஆபத்தான நிலையாகும். அதிக ரத்த கொதிப்பு உள்ளவர்கள் உப்பு குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து கிராம் அளவிற்கு தான் உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு அதிகமாக யாரும் உப்பை எடுத்துக் கொள்வது சாதாரண மனிதருக்கும் ரத்த கொதிப்பு உண்டாக்கக்கூடும் எனவே அதிக அளவில் உப்பு எடுத்துக் கொள்ள கூடாது.
ரத்த கொதிப்பு உள்ளவர்கள் துரித உணவுகளான பிரைட், எண்ணெய் பலகாரங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. இவற்றில் உப்பு அதிகளவில் இருக்கும் எனவே அதனை அறவே எடுத்துக் கொள்ளக் கூடாது. உப்பு சேர்க்கப்பட்ட சீஸ் எடுத்துக் கொள்ளக் கூடாது. அதில் உப்பு மற்றும் கொழுப்பு அதிகமாக இருக்கும். அதனால் கெட்ட கொழுப்புகள் அதிகமாக இருப்பவற்றை எடுக்கக் கூடாது. அதேபோல பப்ஸ், சமோசா போன்ற கெட்ட கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளையும் தவிர்த்து விடுதல் நல்லது, மது அருந்துதல் கூடாது.
சாப்பிடக்கூடாதவை: உப்பு, துரித உணவு, பிரைட் உணவுகள்,எண்ணெய் பலகாரங்கள்,சீஸ்,பப்ஸ்,சமோசா
சாப்பிடக்கூடியவை: மாதுளை, வெந்தயம், நெல்லி, ஆடாதொடை,புரதம், நார்ச்சத்து
BP-ஐ கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்க | Dr. Amudha Damodharan | Tips to control BP
கொழுப்பு, கார்போஹட்ரேட் உணவுகளை குறைவாக எடுத்து கொள்ள வேண்டும். புளிப்பு மற்றும் காரம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். ஆவியில் வேகவைத்த உணவுகளை கட்டாயம் சாப்பிடலாம்.
சிவப்பு நிற காய்கறிகளான கேரட், பீட்ரூட், வெங்காயம் போன்ற காய்கறிகள் உடலுக்கு நல்லது. இதில் பொட்டாசியம் உள்ளது. இந்த பொட்டாசியம் சோடியத்தை அதாவது உடலில் உப்பு தன்மையை சதி விகிதத்தில் பராமரிக்க பயன்படும். எல்லா பல வகைகளையும் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
அதிலும் பொட்டாசியம் அதிக சத்துக்கள் உள்ள பழமான வாழைப்பழம் போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம். அசைவ உணவில் சிக்கன், நாட்டுக்கோழி குறைவாக சாப்பிடலாம். மட்டனை தவிர்க்கலாம். சப்பாத்தி போன்ற கோதுமை பொருட்களை எடுத்துக் கொள்ளலாம் சாப்பாட்டையும் குறைவான அளவில் எடுக்கலாம்.